ஐபிஎல்லில் முறியடிக்கவே முடியாத 3 ரெக்கார்டுகள்

By karthikeyan VFirst Published Apr 1, 2020, 10:38 PM IST
Highlights

ஐபிஎல்லில் முறியடிக்கவே முடியாத 3 அபாரமான சாதனைகளை பார்ப்போம். 
 

கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே இருப்பதுடன் நிலைமை ரொம்ப மோசமாக இருப்பதால், ஐபிஎல் 13வது சீசன் நடப்பதே சந்தேகமாகியுள்ளது. 

எனினும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டபின், ஐபிஎல்லை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இப்போதைக்கு எதுவுமே உறுதியில்லை. எதுவாக இருந்தாலும் ஏப்ரல் 15ம் தேதி அல்லது அதற்கு பின்னர் தான் தெரியவரும். 

இந்நிலையில், ஐபிஎல்லில் இனிமேல் முறியடிக்க வாய்ப்பில்லாத 3 சாதனைகளை பார்ப்போம்.

1. கிறிஸ் கெய்ல் - ஒரு இன்னிங்ஸில் 175 ரன்கள்

ஆர்சிபி அணியில் கெய்ல் ஆடியபோது 2013 ஐபிஎல் சீசனில் புனே அணிக்கு எதிராக காட்டடி அடித்து 66 பந்துகளில் 175 ரன்களை குவித்தார் கெய்ல். அந்த போட்டியில் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் என்ற சாதனையையும் படைத்தார். ஒரே இன்னிங்ஸில் 175 ரன்கள் என்ற சாதனையை இனிமேல் ஒரு வீரர் முறியடிப்பது கடினம். 

2. விராட் கோலி - ஒரு சீசனில் 973 ரன்கள்

ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, 2016 ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் 81 ரன்கள் என்ற சராசரியுடன் 973 ரன்களை குவித்து சாதனை படைத்தார். அந்த சீசனில் விராட் கோலியின் அபாரமான பேட்டிங்கால் ஆர்சிபி அணி இறுதி போட்டி வரை சென்றது. ஆனால் இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோற்று கோப்பையை இழந்தது. இனிமேல் ஒரு வீரர் ஒரு சீசனில், இதைவிட அதிகமான ரன்களை குவிப்பது கடினம்.

3. கிறிஸ் கெய்ல் - ஒரே ஓவரில் 37 ரன்கள்

2011ல் ஆர்சிபி அணிக்காக தனது முதல் போட்டியில் ஆடிய கிறிஸ் கெய்ல், கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிரசாந்த் பரமேஸ்வரனின் பவுலிங்கில் ஒரே ஓவரில் 37 ரன்கள் அடித்தார். அந்த ஓவரில் ஒரு நோபால் உட்பட மொத்தம் 37 ரன்கள் ஆர்சிபி அணிக்கு கிடைத்தது. ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தால் கூட, இந்த சாதனையை முறியடிக்க முடியாது.
 

click me!