டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியில் அதிரடி மாற்றங்கள்.. பிளே ஆஃப் முனைப்பில் கோலி&கோ

By karthikeyan VFirst Published Apr 28, 2019, 4:22 PM IST
Highlights

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனிலும் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. 
 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனிலும் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. 

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் அளவில் உள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்த சீசனை தொடர்ச்சியாக 6 தோல்விகளுடன் தொடங்கிய ஆர்சிபி அணி, அடுத்த 5 போட்டிகளில் 4ல் வென்று 8 புள்ளிகளை பெற்ற நிலையில், எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் முனைப்பில் உள்ளது. ஆனால் அது கடினம் என்றாலும் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இன்றைய போட்டியில் டெல்லியுடன் ஆடிவருகிறது.

ஆர்சிபி அணிக்கு அனைத்து வகையிலும் சிறப்பான பங்களிப்பு செய்துகொண்டிருந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி இங்கிலாந்து திரும்பிவிட்டார். அது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டி மாலை 4 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் மொயின் அலி ஆடாததால் அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் கிளாசன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஆடும் லெவனில் இருந்து டிம் சௌதி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷிவம் துபே அணியில் எடுக்கப்பட்டுள்ளார். தொடக்கம் முதலே தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்த அக்‌ஷ்தீப் நாத் அதிரடியாக நீக்கப்பட்டு குர்கீரத் சிங் மன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அக்‌ஷ்தீப் நாத்திற்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் அதை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

ஆர்சிபி அணி:

கோலி(கேப்டன்), பார்த்திவ் படேல்(விக்கெட் கீப்பர்), டிவில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளாசன், ஷிவம் துபே, குர்கீரத் சிங் மன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், சாஹல்.

click me!