சீனியர் வீரரை தூக்கி எறிந்த தென்னாப்பிரிக்கா.. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரசல் இல்லை!! தென்னாப்பிரிக்கா பேட்டிங்

By karthikeyan VFirst Published Jun 10, 2019, 3:24 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பிலும் தென்னாப்பிரிக்க அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பிலும் களமிறங்கியுள்ளன. 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 

முதல் 3 போட்டிகளிலும் தொடர் தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்க அணி, உலக கோப்பை தொடரில் தங்களது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸுடன் ஆடுகிறது. அதேநேரத்தில் பாகிஸ்தானை முதல் போட்டியில் அடித்து துவம்சம் செய்து பெரிய வெற்றியை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவிடம் ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோற்றது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பிலும் தென்னாப்பிரிக்க அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பிலும் களமிறங்கியுள்ளன. சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் இரு அணிகளிலும் தலா 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்க அணியில் அனுபவ வீரர் டுமினி நீக்கப்பட்டு இளம் வீரர் மார்க்ரம் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஸ்ட் ஸ்பின்னர் ஷாம்ஸி நீக்கப்பட்டு ஹெண்ட்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியில் காயம் காரணமாக ஆண்ட்ரே ரசல் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக கீமார் ரோச் சேர்க்கப்பட்டுள்ளார். லெவிஸுக்கு பதிலாக டேரன் பிராவோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், டேரன் பிராவோ, பூரான், ஹெட்மயர், ஹோல்டர்(கேப்டன்), பிராத்வெயிட், நர்ஸ், ரோச், கோட்ரெல், ஒஷேன் தாமஸ்.

தென்னாப்பிரிக்க அணி:

ஹாஷிம் ஆம்லா, டி காக், டுப்ளெசிஸ்(கேப்டன்), மார்க்ரம், வாண்டெர் டசன், டேவிட் மில்லர், ஃபெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ரபாடா, ஹெண்ட்ரிக்ஸ், இம்ரான் தாஹிர்.
 

click me!