மொத்த விக்கெட்டையும் ஒத்த ஆளா தட்டி தூக்கிய 15 வயது இளம் வீரர்

Published : Nov 07, 2019, 03:04 PM IST
மொத்த விக்கெட்டையும் ஒத்த ஆளா தட்டி தூக்கிய 15 வயது இளம் வீரர்

சுருக்கம்

எதிரணியின் மொத்த 10 விக்கெட்டுகளையும் 15 வயது இளம் வீரர் நிர்தேஷ் பைசோயா வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.   

மேகாலயா மற்றும் நாகாலாந்து அணிகளுக்கு இடையேயான அண்டர் 16 விஜய் மெர்ச்சண்ட் டிராபி போட்டி அசாமில் உள்ள ஒரு பள்ளியின் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் மேகாலயா ஸ்பின்னர் நிர்தேஷ் பைசோயா, நாகாலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திவிட்டார். 

அந்த ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்துள்ளது. அதை நன்கு பயன்படுத்திய நிர்தேஷ் பைசோயா, அபாரமாக பந்துவீசி நன்றாக பந்தை சுழலவிட்டுள்ளார். அவரது சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத நாகாலாந்து வீரர்கள் அனைவரும் அவரிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். 

51 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் நிர்தேஷ். இதற்கு முன்னதாக வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான ரெக்ஸ் சிங்கும் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!