டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு..! சீனியர் வீரர் புறக்கணிப்பு

Published : Sep 06, 2021, 03:13 PM IST
டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு..! சீனியர் வீரர் புறக்கணிப்பு

சுருக்கம்

டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடக்கவுள்ளது. இந்தியாவில் நடக்க வேண்டிய டி20 உலக கோப்பை கொரோனா அச்சுறுத்தலால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனுக்கு மாற்றப்பட்டு அங்கு நடக்கவிருக்கிறது. ஆனால் இந்த தொடரை பிசிசிஐ தான் நடத்துகிறது.

டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தயாராகிவருகின்றன. டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில், சீனியர் வீரர் முகமது ஹஃபீஸ், ஹசன் அலி, முகமது ரிஸ்வான், ஆசாம் கான், ஹாரிஸ் ராஃப், ஷதாப் கான், இமாத் வாசிம், முகமது நவாஸ், சொஹைப் மக்சூத், முகமது வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மிடில் ஆர்டர் பிரச்னையை தீர்க்கும் விதமாக சீனியர் வீரர் சோயப் மாலிக்கை டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்க வேண்டும் என்று கேப்டன் பாபர் அசாம் வலியுறுத்திய நிலையில், பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு அவரது பரிந்துரையை பொருட்படுத்தவில்லை. சோயப் மாலிக்கின் வயது, ஃபிட்னெஸை கருத்தில் கொண்டு அவரை புறக்கணித்தனர் பாகிஸ்தான் அணியின் தேர்வாளர்கள்.

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம்(கேப்டன்), ஷதாப் கான், ஆசிஃப் அலி, அசாம் கான், ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹஃபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), முகமது வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, சொஹைப் மக்சூத். 
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
IND VS NZ முதல் டி20.. ஷ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு 'ஆப்பு' வைத்த இளம் வீரர்.. பிளேயிங் லெவன்!