பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே அசைவம் சாப்பிடக்கூடாது என்பது நமக்கு நினைவுக்கு வரும்
தமிழ் மாதங்களில் ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். செப்டம்பர் மத்தியில் இருந்து அக்டோபர் மத்தி வரை புரட்டாசி மாதம் இருக்கும். அந்த வகையில் வரும் செப்டம்பர் 18-ம் தேதி புரட்டாசி மாதம் பிறக்க உள்ளது. பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே அசைவம் சாப்பிடக்கூடாது என்பது நமக்கு நினைவுக்கு வரும். பெரும்பாலானவர்கள் குறிப்பாக பெருமாளை வணங்குவோர் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? விரிவாக பார்க்கலாம்..
பொதுவாக புரட்டாசி மாதத்தில் தான் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலமாக இருக்கும் மழை என்றாலும் அதிக மழை இருக்காது. லேசான மழையாகவே பெய்யும். எனவே வெயிலால் சூடான பூமியில் லேசான மழை சுட்டை அதிகமாக வெளியிடும். மேலும் கோடை காலத்தில் இருக்கும் சூடான காலநிலையைவிட மோசமான விளைவுகளை தரக்கூடியது. எனவே இந்த நாட்களில் அசைவம் சாப்பிட்டால், நம் உடல் சூடு மேலும் அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இதனால் வயிற்றில் தொற்று, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த காலக்கட்டத்தில் நமது செரிமான சக்தி குறைவாக இருக்கும். பொதுவாக அசைவ உணவுகள் செரிமானமாக அதிக நேரம் எடுக்கும் எனவே அசைவம் சாப்பிடுவதால் நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படலாம். இதன் காரணமாகவே புரட்டாசி மாதம் அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட கூடாது என்பதற்கான அறிவியல் காரணம் இதுதான்.
undefined
மாதவிடாய் நாட்களில் பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? விளக்கம் இதோ..!!
நமது முன்னோர்கள், அறிவியலை ஆன்மீகத்தில் புகுத்தி பல விரத முறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் இதுவும் ஒன்று. அதாவது உடல் ஆரோக்கியத்தை காக்கவே புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி கோயிலுக்கு சென்று துளசி தீர்த்தத்தை அருந்தவும் அறிவுறுத்தி உள்ளனர்.
துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும். நோய் தொற்று அதிகமாகும் புரட்டாசி மாதத்தில் துளசி தீர்த்தம் அருந்துவது நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். புரட்டாசியில் புது மழை காரணமாக நீரினால் பரவும் தொற்று நோய்கள் ஏற்படலாம். இதை தடுக்கவே புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும், விரதம் இருந்து கோயிலுக்கு செல்லவும் அறிவுறுத்தி உள்ளனர்.