ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன
ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் கடவுளாக கருதப்படும் விநாயகரின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையே விநாயகர் சதுர்த்தி. நாடு முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமானது. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே ஒவ்வொரு ஆண்டும் இந்த பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பொதுவாக விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வைக்கப்படும் விநாயகர் சிலை 3-வது நாள் அல்லது 5-வது நாள் 7-வது நாள் கடல் அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படும். ஆனால் பீகாரில் உள்ள ஒரு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பீகாரில் உள்ள நாளந்தா மாவட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. நாளந்தா மாவட்டத்தில் விநாயகர் புத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். நாளந்தா விநாயகர் சதுர்த்தி தொடர்பான வேறு சில சுவாரஸ்யமான அம்சங்களும் உள்ளன.
undefined
விநாயக சதுர்த்தி 2023 எப்போது தெரியுமா? தேதி, சுப முகூர்த்தம், வரலாறு, முக்கியத்துவம் மற்றும் பல...
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் சுரேஷ் பிரசாத் இதுகுறித்து பேசிய போது “புத்த விநாயகரை வழிபடும் பாரம்பரியம் கடந்த 125 ஆண்டுகளாக தொடர்கிறது. பொதுவான கொண்டாடங்களை போலல்லாமல், விநாயக சதுர்த்தி 12 நாட்களுக்கு இங்கு கொண்டாடப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இருந்து தொழிலதிபர்கள் பணி நிமித்தமாக பீகாருக்கு வரும்போது இந்த பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது. ஒருமுறை, விநாயக சதுர்த்தி நேரத்தில் அவர்களால் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை. பின்னர் நாளந்தாவில் விநாயகப் பெருமானுக்கு சிலை செய்து விழாவை நினைவுகூற முடிவு செய்தனர். இந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது.
விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக ஒரு காலத்தில் வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் நாளாந்தாவுக்கு ச்னெறனர். இப்போது, பீகாரின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் விழாவைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்; ஆனால், முன்பு நாலந்தாவைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மட்டுமே இதைக் கடைப்பிடித்தனர். இந்த 12 நாள் திருவிழாவின் போது, நாளந்தாவில் உள்ள பூர்வீகவாசிகள், விநாயகர் சதுர்த்தி தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைப்பார்கள். பின்னர், விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று, நடனம் மற்றும் இசையுடன் கொண்டாடுகிறார்கள். பின்னர் அவர்கள் விநாயகப் பெருமானை நீரில் கரைத்து விழாவை முடிக்கின்றனர்” என்று தெரிவித்தார்.
வரும் செப்டமபர் 18-ம் தேதி மதியம் 12:39 மணிக்கு தொடங்கும் சதுர்த்தி திதி செப்டம்பபர் 19 அன்று மதியம் 1:43 மணிக்கு முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.