புரட்டாசி சனி விரதம் இருந்தால்  நினைத்தது நடக்கும்..அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா?

By Kalai Selvi  |  First Published Sep 23, 2023, 11:37 AM IST

புரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் சிறப்பு குறித்து இங்கு பார்க்கலாம்.


பொதுவாகவே எல்லா மாதங்களிலும் சனிக்கிழமை விரதம் கடைப்பிடிக்கலாம். ஆனால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் விசேஷம் என்று கூறலாம்.

சனிக்கிழமை விரதம் ஏன்?
பொதுவாகவே, நாம் விரதம் இருப்பது நமது வேண்டுதல்களை கடவுள்  நிறைவேற வேண்டும் என்பதற்காக தான். மேலும், ஆரோக்கியமாக இருக்க, செல்வ செழிப்புடன் இருக்க, நீண்ட ஆயுடன் வாழ வேண்டும் என்று நாம் நினைப்போம். இவை அனைத்தும் உங்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.

Tap to resize

Latest Videos

அதுபோல், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வதுண்டு. ஏனெனில், அவரது ஆதிக்கத்தைப் பொறுத்து ஆயுட்காலம் அமையும் என்று கூறப்படுகிறது. இப்படி எல்லாவற்றிற்கும் சிறந்து விளங்குபவர் சனி. இவரை கட்டுப்படுத்துபவர் பெருமாள். இவர் சனிக்கு அதிபதி ஆவார். மேலும் பெருமாளுக்கு உகந்த நாள் சனிக்கிழமை என்பதால், இந்நாளில் விரதம் இருந்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி, ஒரு மனிதன் பாவம் குறைந்து நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று நினைத்தால் சனி விரதம் இருப்பது சிறந்தது.

இதையும் படிங்க: செல்வ வளத்தை பெருக்கும் பெருமாள் வழிபாடு.. புரட்டாசி சனிக்கிழமை விரதம் எப்படி இருக்க வேண்டும்?

புரட்டாதி  சனிக்கிழமை விரதம் ஏன் சிறப்பு?
நீங்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் இருக்கும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமல்லாமல், ஒருவர் 
சகல செல்வமும் பெற்று வாழ வேண்டும் என்று நினைத்தால் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது. மேலும் சனி அன்று விரதம் இருந்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடத்திலிருந்து பெருமாள் நம்மை காப்பார். இந்நாட்களில் விரதம் இருப்பவர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பர் மற்றும் ஆலயங்களுக்கு சென்று பெருமாளை வழிபடுவார்கள்.

புரட்டாசி மாதம்:
புரட்டாசி மாதம் என்பது சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களே. மேலும் இந்த மாதமானது, பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகும். மறைந்த நம் முன்னோர்கள் பிதுர் லோகத்தில் வசிப்பர். இந்நிலையில், சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி கட்டளையிடுவார். பின் அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, பூமிக்கு வருகின்றனர். அதன் பின் அவர்கள் பூமியில் 15 நாட்கள் தங்குவர்.  அப்படி அவர்கள் தங்குவதை நாம் “மகாளய பட்சம்" என்று அழைக்கிறோம். இந்த மகாளய பட்சம் நாட்களில் நாம் நம் முன்னோர்களுக்கு தினமும் தர்ப்பணம் அல்லது அன்னதானம் செய்ய வேண்டும். ஒருவேளை உங்களால் தினமும் அன்னதானம் செய்ய முடியவில்லை என்றால் தர்ப்பணம் கொடுப்பதை மறந்து விடக்கூடாது. அது மட்டுமல்லாமல் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து எழுச்சி ஏதும் எடுக்காமல், கடவுளைப் புகழ்ந்து பாடி பாராயணம் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:  நாளை புரட்டாசி சனிக்கிழமை.. சனிபகவானின் பாதிப்பில் இருந்து தப்ப என்ன செய்ய வேண்டும்?

புரட்டாசி ஆன்மீக மாதம்:
இந்த புரட்டாசி மாதத்தில் தான் நவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பராசக்திக்குரிய பூஜை மாதம் இம்மாதமாகும். ஆகையால் இம்மாதத்தில் தவறாமல் வழிபாடு செய்து வந்தால் உங்கள் முன்னோர்களின் நல்லாசியைப் பெறுவீர்கள்.

புரட்டாசி சனிக்கிழமை விரதம்?
புரட்டாசி சனிக்கிழமை அன்று விரதம் இருக்க விரும்புவோர் அதிகாலையில் எழுந்து நீராடி நாராயணனை வழிபட வேண்டும். மேலும் அந்நாளில் ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ண வேண்டும். குறிப்பாக சாத்வீகமான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுபோல் மாலையிலும் நீராடி அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வழிபட வேண்டும். இவ்வாறு நீங்கள் வழிபட்டால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்பது நம்பிக்கை. அதிர்ஷ்டம் நிச்சயம்.

click me!