தடைப்பட்ட திருமணம் கைகூட திருமணக்கோல வெங்கடாஜலபதியை தரிசியுங்கள்!

Published : Oct 04, 2022, 08:20 AM IST
தடைப்பட்ட திருமணம் கைகூட திருமணக்கோல வெங்கடாஜலபதியை தரிசியுங்கள்!

சுருக்கம்

பரிகாரங்கள் செய்த பிறகு திருமணம் கைகூட வில்லை என்று புலம்புவர்கள் ஒரு முறை திருமணக்கோலத்தில் இருக்கும் வெங்கடசலபதியை தரிசனம் செய்தால் திருமணம் கைகூடும்.   

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து செல்லும் பெரம்புர் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில்  பெருமாள் மலை கோவில் உள்ளது.  இது திருப்பதியை போன்று 7 சிறு மலைக்குன்றுகளையும் கடந்து இந்த கோவிலை அடையலாம். இந்த கோவிலுக்கு படிக்கட்டுகளும் உண்டு. இதன்  வழியாக ஏறி சென்றால் 1564 படிக்கட்டுகளை ஏறி பெருமானை தரிசிக்க வேண்டும்.  திருப்பதிக்கும் இந்த கோவிலுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. அதனால் தான் பக்தர்கள் இதை தென் திருப்பதி என்று சொல்கிறார்கள். 

திருப்பதி அருகே நாகலாபுரம் கிராமம் போன்று இந்த கோவிலுக்கு அருகிலும் நாகலாபுரம் கிராமம் உள்ளது. திருப்பதி போன்றே இங்கும் அலமேலு மங்கை கோவிலும் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோயிலும் உள்ளது. 

இங்கு இருங்கும் பெருமாள்  ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பிரசன்ன வேங்காடாசலபதியாய்   பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த கோவிலில் இருக்கும் ஏழு கருங்கல் தூண்களும் விசெஷமானவை. ஏழு தூண்களில் இருந்தும் ஏழு ஸ்வரங்கள் வெளிப்படும் வகையில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்புமிக்கது. 
 
இந்த கோவிலை சோழமன்னன் கரிகாற்சோழனின் பேரன் உருவாக்கியதாக தல வரலாறு சொல்கிறது. இவர் தனது குருவின் திருமந்திர உபதேசம் பெற்று திருப்பதி பெருமானை சேவித்தபடி இறைவனை அடைய இலந்தை மரத்தின் அடியில் இருந்து தவம் செய்தார். இவரது தவ வலிமையை உணர்ந்து வேங்கடமுடையான் திருமண கோலத்தில் காட்சி அளித்ததாகவும் அதனால் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீ பிரச்சன்ன வேங்கடாசலபதி என்றும் பெயர் வந்ததாக வரலாறு. 

ஏழரை நடக்குதோ இல்லையா.. இதை செய்தா சனி பகவான் சந்தோஷமாவார்!

இந்த தலத்தில் பெருமாளை வணங்கி  தவம் இருந்த மன்னன் ஸ்தலநாயகனாக கருப்பண்ணார் சுவாமியாக இங்கு வீற்றிருக்கிறார்.  திருமணத்தடை கொண்டவர்கள் முதலில் இவரிடம் சென்று  பிரார்த்தனை செய்ய வேண்டும். இவர்  பெருமாளிடம் சொல்லி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களின்  வாக்கு.

திருமணத்தடை மட்டும் அல்ல,  தீய சக்திகள், எதிரிகள் தாக்குதலை தவிடு பொடியாக்குவதாக கருப்பண்ணர் காக்கிரார் என்றும் சொல்வதால்  உங்கள் அத்தனை வேண்டுதல்களையும் இவரிடம்   சொல்ல உங்கள் வேண்டுதலை பெருமாளிடம் நிறைவேற்றி கொள்ளலாம்.

பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா?

பெருமாள் கோவிலில் எங்கும் இல்லாத சிறப்பாக இந்த கருப்பண்ண சுவாமி அருள்பாலிக்கிறார். மேலும் இவருக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த கோவிலில் வடக்கு முகமாக இரணியனை மடியில் வைத்து அமர்ந்திருக்கும் ஸ்ரீ நரசிம்மரும் உண்டு. 

திருமணத்தடையோடு குழந்தைப்பேறு வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரங்களை அளிக்கிறார் இங்கிருக்கும் தாயாரான் ஸ்ரீ அலர்மேல் மங்கை.  திருமண பாக்கியம் கைகூட ஒவ்வொரு சனி அன்றும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள் பக்தர்கள். தொடர்ந்து 9 வாரங்கள் விளக்கேற்றினால் கை கூடும் என்பது நம்பிக்கை.  குழந்தை பேறு வேண்டுபவர்கள் இந்த தாயாரை வேண்டி வளையல் கட்டி தொட்டி கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் தருகிறாள் அன்னை. 

புரட்டாசி மாதம் விசேஷம் என்றாலும்  பெருமாளை எல்லா நாள்களிலும் தரிசிப்பதும் விசேஷம் தான். அதனால் திருமணத்தடை நீங்க கருப்பண்ண சுவாமியையும் வேங்கடாஜலபதியையும் வேண்டுங்கள்.

PREV
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!