சாய் நிகழ்த்திய அற்புதம்...கண்டிராத பேரின்பத்தில் பக்தர்!

By Dinesh TGFirst Published Oct 1, 2022, 11:55 AM IST
Highlights

சாய் பாபா தன்னை சரணாகதி அடைந்த  பக்தர்களை அவர்கள் இக்கட்டின்போது கைக்கொடுத்து தூக்குவாரேயன்றி ஒருபோதும் கைவிடுவதில்லை. இதற்கு சான்று கூற பக்தர்களுக்கு பல அற்புதங்கள் அவர் நிகழ்த்தி இருக்கிறார். அதில் ஒன்றைத்தான் இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.
 

தாகம் தாகம்..

நானா சந்தோர்கர் என்பவர் சாயிபாபாவின் தீவிர பக்தர். இவர் கோடைக்காலத்தின்போது  ஒரு நாள் ஹரிச்சந்திரா எனும் மலை மீது ஏறிக்கொண்டிருந்தார். திடீர் என்று நா வறண்டு தண்ணீர் தாகம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. தாகத்துடன் எப்படி மலை ஏறுவார்? அவரால் முடியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தார், எங்கும் தண்ணீர் இல்லை. ஒரே வருத்தமாகப் போய்விட்டது.

இந்நேரம் சாய் இருந்தால்...

இந்த நேரத்தில் சாய் பாபா நம்மோடு இருந்திருந்தால், அவரின் அற்புதத்தால் தண்ணீர் கிடைத்து தாகம் பறந்தோடிப் போயிருக்குமே... நம்முடன் சாயி இல்லையே என்று கவலை கொண்டார். பாருங்கள் அந்த நேரத்தில் சாய் பாபா 40 மைல்களுக்கு அப்பால் சீரடியில் இருந்தார்.

பக்தன் தவிக்கிறான்...

இதே நேரத்தில் மசூதியில் பக்தர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்த சாய் பாபா, கோடை வெயில் சுட்டெரிக்கிறதே.. இந்த நேரத்தில் மலை ஏறிக்கொண்டு இருக்கும் நானா சந்தோர்கர் தாகத்தில் தவித்துக் கொண்டு இருக்கிறாரே... அவருக்கு ஒரு கை  அளவுக்காவது நீர் கொடுக்க வேண்டாமா என்று சொல்கிறார். பக்தர்களுக்கு பாபா எதைப்பற்றி, யாரைப்பற்றி பேசுகிறார் என்று விளங்கவில்லை.

வேடுவா... தண்ணீர்

இதே நிறத்தில் மலை ஏறிக்கொண்டு இருக்கும் நானா சந்தோர்கர், மலையில் இருந்து இறங்கி வந்துக்கொண்டு இருக்கும் ஒரு வேடுவனிடம், வேடுவா, எனக்கு தாகம் அதிகமாக இருக்கிறது. இங்கு எங்காவது  நீர் கிடைக்குமா என்று கேட்கிறார்.

மகனே.. தண்ணீர் குடி

வேடுவன் சிரித்தபடியே நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்களே... அந்த பாறைக்கு  அடியில்  நீர் இருக்கிறது என்று சொல்லிவிட்டு போனான்.  என்னது பாறைக்கு அடியில் நீரா என்று வியந்து, நானாவும் பாறையை நகர்த்திப் பார்க்க, என்ன ஆச்சரியம்! சுட்டெரிக்கும் கோடை காலத்தில் பாறைக்கு அடியில் ஒரு கைப்பிடி அளவுக்கு நீர் மகனே குடி என்பது போல காட்சி தந்தது.பிறகென்ன மகிழ்வோடு நானா தாகத்தை தனித்துக்கொண்டார்.

கெட்டவனான துரியோதனனுக்கும் கோயில் உண்டாம் தெரியுமா?

என்னே அற்புதம்!

பின்னர் பல நாட்கள் கழித்து பாபாவை தரிசிக்க சீரடிக்கு சென்றார் நானா. அப்போது சாயி பாபா, என்ன நானா, நீங்கள் மலை ஏறுகையில் தாகத்தில் துவண்டு போனீர்கள்.. அப்போது நான் அளித்த நீரை நீங்கள் அருந்தினீர்கள் இல்லையா என்று கேட்டார்.

நினைத்தாலே வருவார் பாபா

நானா உடல் முழுக்க வெப்பம் பாய, மயிர் கூச்செறிந்து பக்தி பரவசத்தில் மெய் மறந்து போனார். கண்களில் நீர் பெருகி வழிந்தோடியது. காணாத பேரின்பத்தில் பாபாவை கண்டு பேரானந்தம் அடைந்தார். என்னே பாபாவின் மகிமை! நினைத்த மாத்திரத்தில் வந்து நிழலாய் வந்து அருள் பாலித்து அற்புதம் நிகழ்த்துவார் பாபா.

நவராத்திரி ஸ்பெஷல் - அம்மன் அருள்பெற இந்த ஸ்லோகம் சொல்லுங்கள்!!

பாபாவின் பக்தர்கள் ஒரு போதும் கடுமையான இக்கட்டை சந்தித்ததே இல்லை. அப்படி சந்தித்தவர்கள் கூட பாபாவின் கரம் பிடித்து அதை பக்குவமாக கடந்து சென்றே இருக்கிறார்கள். பாபாவின் பக்தர்கள் எப்போதும்  தேவை என்பதை அனுபவித்ததே இல்லை. 

click me!