கபாலீஸ்வரி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி 508 விளக்கு பூஜை

By Dinesh TG  |  First Published Oct 1, 2022, 9:14 AM IST

நவராத்திரி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மதுரையில் பழமையான கபாலீஸ்வரி அம்மன் கோவில் சார்பில் உலக நன்மை வேண்டி 508  திரு விளக்கு பூஜை நடைபெற்றது.


நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறப்பு வழிபாடுகள் மெற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் மதுரை மாடக்குளம் கிராமத்தில் 120வது நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு உள்ள பழமையான கபாலீஸ்வரி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் மாபெரும் விளக்கு பூஜை நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

விளம்பரம் வேண்டுமானால் படங்களில் நடிக்கலாம்: உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு டோஸ் விட்ட நீதிமன்றம்

இந்த விளக்கு பூஜையானது உலக நன்மை வேண்டியும், நோய்த்தொற்று நீங்கி அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. 508 திரு விளக்குகளை வைத்து பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.

நவராத்திரி இப்படித்தான் உருவானதாம்.. தெரிஞ்சுக்கங்க!
 

வருடந்தோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் விளக்கு பூஜை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விளக்கு பூஜையின் முடிவில் கபாலீஸ்வரி  அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

click me!