வெள்ளெருக்கு விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்பது உண்மையா?

By Dinesh TGFirst Published Sep 30, 2022, 5:42 PM IST
Highlights

பொதுவாகவே வெள்ளெருக்க வேருக்கு என்று சில தெய்வீக சக்திகள் உள்ளது.  அதனால் தான் இது தேவ மூலிகை அல்லது விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. அரிதான பொருள் கிடைக்கும் இடங்களில் தான் செடி முளைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வெள்ளெருக்கு செடி இருக்கும் இடங்களில் தெய்வசக்திகளும் நிறைந்திருக்கும் என்றும் சொல்வதுண்டு.

வெள்ளெருக்க வேரைப் பயன்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைக்கு சில அபூர்வ சக்திகள் இயற்கையாகவே உள்ளது. 12 ஆண்டுகளுக்கு மேல் ஒரு வெள்ளெருக்கன் செடி வளர்ந்தால் அதன் வேரில் சுயம்புவாக விநாயகரது வடிவம் தோன்றும் என்று கூறப்படுகிறது.

சக்தி வாய்ந்த வெள்ளெருக்க விநாயகர் சிலையை யாராலும் நினைத்தவுடன் செய்து விட முடியாது. அதற்கு சில முறைகள் உள்ளன. பொதுவாக வெள்ளெருக்கன் செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளது. ஆகையால் அதை உடனே வெட்ட கூடாது. நன்கு முற்றி பக்குவப்பட்ட வெள்ளெருக்க செடியை முதலில் கண்டறிந்து அதற்கு சில பரிகார முறைகள் செய்து சில நாட்கள் காத்திருந்த பின்பு தான் அதனை வெட்ட வேண்டும். எந்த பரிகாரமும் செய்யாமல் செடியை வெட்டி பிள்ளையாரை செய்வதால் பலன் இல்லை.

மழையே இல்லாமல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழும் சக்தி வெள்ளெருக்க செடிக்கு உள்ளது. அது போல பல்வேறு இடையூறுகளில் இருந்து பல ஆண்டுகள் நம்மை காத்துக் கொண்டிருக்கும் சக்தி வெள்ளெருக்க வேரில் இருந்து செய்யப்படும் விநாயகருக்கு உண்டு. வெள்ளெருக்க விநாயகர் சிலையை வீடுகளில் வைத்து பூஜை செய்து வருவதன் பயனாக வீடு முழுக்க நேர் மறை ஆற்றல் அதிகரிக்கும், செல்வம் சேரும், வீட்டில் உள்ளவர்களின் செல்வாக்கு உயரும்.

ஏழரை நடக்குதோ இல்லையா.. இதை செய்தா சனி பகவான் சந்தோஷமாவார்!

இந்த காலத்தில் பலர் பணத்திற்காக வெள்ளெருக்க தண்டு கொண்டு பிள்ளையார் செய்து விற்று வருகின்றனர். ஆனால் அது விரைவில் உளுத்து விடும் என்பதே உண்மை. வெள்ளெருக்க வேரால் செய்யப்படும் விநாயகர் சிலைக்கே சக்தி உண்டு.

வெள்ளிருக்க விநாயகரை வீடுகளிலே செய்ய நினைப்போர், வெள்ளெருக்க செடிக்கு பரிகாரம் செய்து வேறை வெட்டி எடுத்து ஆச்சாரியிடம் கொடுத்து விநாயகரை செய்த பின் வெள்ளிக்கிழமை அன்று வரும் ராகுகாலத்தில் மஞ்சள் கலவையை விநாயகருக்கு பூச வேண்டும். அதன் பிறகு அடுத்த வெள்ளிக்கிழமையில் வரும் ராகு காலத்தில் அரைத்த சந்தனத்தை பூசி நிழலில் காய வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வேருக்கு ஏதேனும் தோஷம் இருந்தால் நீங்கும், விநாயர்கள் சிலையில் இருந்து நல்ல கதிர்வீச்சு வர துவங்கும். இதன் பின்னர் வெள்ளருக்க விநாயகர் சிலையை வீட்டில் வைத்து தினமும் தீப தூபம் காட்டி வழிபடலாம்.

தமிழகத்தில் காசியை மிஞ்சும் ஒரு கோவில்!!

இந்த வெள்ளெருக்கு பட்டை திரி நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் அதை வாங்கி விளக்கேற்றினால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் துர்சக்திகள் வெளியேறிவிடும்.  நம்பிக்கையோடு தும்பிக்கையானை துதித்தால் துன்பங்கள் தொலைவில் ஓடிவிடும்.

click me!