வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் கடவுள் இருக்கிறார். அது மட்டுமில்லை, கடவுளை சிலை வடிவில் வழிபடுவதில் ஆன்மீகம் மட்டுமல்ல, அறிவியல் காரணமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இறைவனை உருவ வழிபாடு செய்யும்போது, நம் மனமும் இதயமும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும். அதே நேரம் அந்த சிலை உடைந்தாலோ, நம் கையிலிருந்து விழுந்தாலோ நல்லதல்ல. அது நம்மை வருத்தத்திற்கு உட்படுத்தும். நம்முடைய நம்பிக்கை அதனுடன் இணைந்துள்ளது.
நாள்தோறும் வீட்டில் பூஜை செய்வது நம் வீட்டில் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது. இதற்கு வீட்டின் பூஜை அறையின் திசை, நிலை ஆகியவையும் முக்கியமானது. வாஸ்துபடி வீட்டின் திசை, எந்தெந்த சிலைகளை வீட்டில் வைக்கக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
வாஸ்து குறிப்புகள்
- பூஜையறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அங்கு உடைந்த பொருட்களை வைக்கக்கூடாது.
- பூஜையறையில் எப்போதும் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். குறிப்பாக மாலையில் தீபம் வைப்பது ரொம்ப நல்லது. அங்கு குளிக்காமல் பிரவேசிக் கூடாது.
- புராணங்க விநாயகர் தான் முதன்மை தெய்வமாகக் கருதப்படுகிறார். எந்த சுப அல்லது மத சடங்குகளை செய்வதற்கு முன், விநாயகர் பூஜை செய்ய வேண்டும்.
- வீட்டில் ஒரு விநாயகர் சிலை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் இருக்கக் கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, விநாயகரை மகாலட்சுமியின் இடதுபுறம் வைக்க வேண்டும். இதனுடன் சரஸ்வதியின் வலது பக்கத்தில் லட்சுமி தேவியை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
- விநாயகர் சிலையை வைக்கும் போது ஒரு விஷயத்தை கவனத்தில் வைக்க வேண்டும். பாரிஸ் சாந்து, நடனம் ஆடும் தோரணையில் செய்யப்பட்ட சிலைகளை வைக்கக் கூடாது. எப்போதும் விநாயகர் அமர்ந்திருக்கும் தோற்றம் தரும் சிலையை வைத்திருக்க வேண்டும். ஆசீர்வாத தோரணையில் உள்ள சிலை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: கோயில்களில் இறைவனுக்கு ஏன் அபிஷேகம் செய்கிறார்கள்.. பிரபஞ்ச ஆற்றலுக்கு தொடர்பு? அதன் வரலாற்று பின்னணி என்ன?
- மகாலட்சுமியின் சிலையை வீட்டில் வைக்க வேண்டும். அது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். லட்சுமி இருக்கும் இடத்தில் வறுமை இருக்காது. குறிப்பாக லட்சுமி சிலை எப்போதும் உட்கார்ந்த நிலையில் இருக்க வேண்டும். நின்ற சிலையை வழிபாட்டு இல்லத்தில் வைக்கக்கூடாது. மகாலட்சுமியுடன் விஷ்ணுவின் சிலையை வைத்திருந்தால், அது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
- வழிபாடு செய்யும் வீட்டில் அனுமன் சிலையையும் வைக்க வேண்டும். துன்பங்களை அழிப்பவர் அனுமன். அனுமன் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டு பிரச்சனைகள் நீங்கும். எனவே தான் வீட்டில் அமர்ந்த நிலையில் அனுமன் சிலையை வைக்க வேண்டும்.
- வீட்டில் அண்ணன் அல்லது குடும்பத்தாருடன் பிரச்சனை வந்தால் கண்டிப்பாக ராமர் தர்பார் சிலையை பூஜையறையில் வைக்க வேண்டும். இதை வீட்டில் வைத்து வழிபடுவதால் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும்.
- வழிபாடு செய்யும் இடத்தில் சிவலிங்கத்தை வைக்க வேண்டும். அந்த சிவலிங்கம் பெரிதாக இருக்கக்கூடாது. நீங்கள் சிவலிங்கத்தை வைத்து இருந்தால், ஒவ்வொரு நாளும் சிவலிங்கத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும்.
- மரணித்த உறவினர்களின் படத்தை பூஜையறையில் வைக்கக்கூடாது, அவர்களின் படத்தை தினமும் வணங்கக்கூடாது. அவர்களின் பித்ரு பக்ஷத்தில் மட்டுமே வழிபட வேண்டும்.
- ராகு-கேது, சனி பகவான் மற்றும் காளி தேவியின் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது. ஏனெனில் இந்த தெய்வங்கள் அனைத்தும் உக்கிரமான பிரிவில் வருவதால் அவர்களை வழிபடுவது மிகவும் கடினம். அதனால் அவர்களின் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
- வாஸ்துவின்படி, இரண்டு அல்லது மூன்று பேர் அமைதியாக வந்து பிரார்த்தனை செய்ய, உகந்த பூஜை அறையின் அளவு குறைந்தது 5×7 அடியாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: யார் யாருக்கு ராஜயோகம்.. பல நூற்றாண்டுகளுக்கு பின் 4 ராசிகளுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. உங்க ராசி என்ன?