வரலட்சுமி விரதம் 2024 : வீட்டில் கலசம் அமைக்கும் முறை பற்றி தெரியுமா?

By Kalai Selvi  |  First Published Aug 14, 2024, 8:53 AM IST

Varalakshmi Pooja Kalasam 2024 : வரலட்சுமி விரதத்தின் போது பயன்படுத்தப்படும் கலசத்தை தயாரிப்பது எப்படி என்று இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.


பொதுவாகவே, ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரதமானது ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு வரலட்சுமி விரதமானது ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த வரலட்சுமி விரத நாளில் திருமணமான சுமங்கலி பெண்கள் லட்சுமி தேவிக்காக விரதம் இருந்து வழிபடுவார்கள். இப்போது, வரலட்சுமி விரதத்தின் போது பயன்படுத்தப்படும் கலசத்தை தயாரிப்பது எப்படி என்று இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

2024 வரலட்சுமி விரதம் பூஜை நேரம்:

Latest Videos

undefined

மகாலட்சுமி வீட்டிற்கு அழைக்க உகந்த நேரம்:

15 ஆகஸ்ட் 2024 - மாலை 6 மாணி முதல் 8 மணி வரை
16 ஆகஸ்ட் 2024 - காலை 6மணி முதல் 7. 20 மணி வரை

வரலட்சுமி பூஜை செய்வதற்கான உகந்த நேரம்:

16 ஆகஸ்ட் 2024 - காலை 9 மணி முதல் 10.20 மணி வரை. அதேபோல் அன்று மாலை 6 மணிக்கு மேல்

புனர்பூஜை செய்வதற்கான உகந்த நேரம்:

17 ஆகஸ்ட் 2024 - காலை 7.35 மணி முதல் 8.55 மணி வரை. அதுபோல காலை 10.35 மணி முதல் 12 மணி வரை

18 ஆகஸ்ட் 2024 - காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை. அதுபோல காலை 10:45 மணி முதல் 11.45 மணி வரை

இதையும் படிங்க:  வரலட்சுமி விரதம் 2024 : வீட்டில் இப்படி பூஜை செய்ங்க.. சுமங்கலி பாக்கியம் கிட்டும்!

கலசத்தை தயாரிப்பது எப்படி?

வரலட்சுமி பூஜைக்கு கலசம் தயாரிக்க முதலில், திருமணமான பெண்கள் ஒரு நாள் முன்பே அதிகாலையிலேயே எழுந்து, பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீராடி விட்டு, பின் பூஜை செய்யும் இடத்தை கோலங்கள் மற்றும் மா கோலத்தால் அலங்கரிக்கவும். இப்போது வீட்டில் வெள்ளை அழுது வெண்கல கலசம் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளவும். பின் பூஜை அறையில் ஸ்வஸ்திக் சின்னம் வரையவும். இப்போது கலசத்தில் ஐந்து வகையான இலைகள் சுத்தமான தண்ணீர் நாணயங்கள் பச்சரிசி வெற்றிலை பாக்கு ஆகியவற்றை போட வேண்டும். அதுமட்டுமின்றி, கண்ணாடி, மஞ்சள், கருப்பு மணிகள், சீப்பு, சிறிய கருப்பு வளையல்கள் போன்ற பொருட்களையும் வைக்கவும்.

பின் கலசத்தின் கழுத்து பகுதியை ஒரு பட்டு துணியால் சுற்றி மா இலைகள், அழகான ரோஜா மாலை கொண்டு அலங்கரிக்கவும். பிறகு ஒரு தேங்காய் எடுத்து அதன் முழுவதும் மஞ்சள் தடவும். இந்த கலசத்தில் லட்சுமி தேவி குடியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, கலசத்திற்கும் ஆரத்தி எடுக்கவும்.

பூஜையில் முதலில் விநாயகப் பெருமானுக்கு முதல் வழிபாட்டுடன் வரலட்சுமி பூஜையானது ஆரம்பமாகிறது. பூஜையில் படைக்கப்பட்ட உணவுகள் குடும்பங்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு வழங்கப்படும். வரலட்சுமி பூஜை முடிந்ததும் அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் அந்நாளில் கலசத்தில் இருக்கும் நீரை பூஜை அறை, படுக்கையறை சமையலறை மற்றும் வீட்டில் இருக்கும் அனைத்து இடங்களிலும் தெளிக்க வேண்டும். இந்த நீர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நேர்மறை ஆற்றலை வழங்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க:  வரலட்சுமி விரதம் 2024 : விரதம் இருக்கும் பெண்கள் எந்த மாதிரியான உணவுகள் சாப்பிடலாம்?

வரலட்சுமி பூஜை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

வரலட்சுமி பூஜை அன்று ஒவ்வொரு ஆண்டும் திருமணமான பெண்களால் செய்யப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால், கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் பொருளாதார ஆசீர்வாதம் கிடைக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

click me!