Good Luck Things : காலை எழுந்ததும் நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய சில விஷயங்களை முன்னோர்கள் நமக்கு சொல்லிச் சென்றுள்ளனர். அதைப் போல சில விஷயங்களை பார்ப்பதால் நம்முடைய அதிர்ஷ்டமும், நல்வாய்ப்பும் நம்மை விட்டு விலகும். அது குறித்து இங்கு காணலாம்.
நம்முடைய ஒவ்வொரு நாள் விடியலும் இறைவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதம். காலையில் நாம் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்துகிறோமோ அதுதான் நம்முடைய நாள் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும். நீங்கள் சில நல்ல விஷயங்களை காலையில் செய்யும் போது உங்களுடைய நாள் ஆசீர்வாதமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் நமக்கு புதிய வாய்ப்புகளையும், சவால்களையும் கொடுக்கிறது. அதிகாலை எழுந்ததும் அந்த நாளை, நமக்கு கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
உள்ளங்கை ரகசியம்:
undefined
தூங்கி எழுந்ததும் நாம் காணும் முதல் விஷயம் நம்முடைய நாளை இன்னும் அழகாக மாற்றும். ஆகவே அந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். காலை எழுந்ததும் சில பொருட்களை காண்பது நமக்கு புத்துணர்வை வழங்கும் என பெரியோர் சொல்வர். நீங்கள் படுக்கையை விட்டு எழுந்ததும் உங்களுடைய இருஉள்ளங்களையும் ஒருசேர பார்ப்பது அன்றைய நாளை அதிர்ஷ்டமானதாக மாற்றும். சாஸ்திரங்களின்படி, நமது உள்ளங்கைகளில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். ஆகவே காலையில் விழித்ததும் உள்ளங்கையை காண்பது நல்ல விஷயம்.
இதையும் படிங்க: தினமும் காலை சோர்வாக உணர்கிறீர்களா..? புத்துணர்ச்சியுடன் நாளை தொடங்க சூப்பரான டிப்ஸ்..!
கண்ணாடி மகிமை:
காலையில் விழித்ததும் பிறர் முகத்தை காண்பதை காட்டிலும், நம்முடைய முகத்தை கண்ணாடியின் பார்ப்பதே சிறந்தது. இந்து நம்பிக்கைகளின் படி தெய்வங்களில் படங்கள் சிலைகள் ஆகியவற்றை காண்பது நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும் என நம்பப்படுகிறது நீங்கள் காலை எழுந்ததும் மகாலட்சுமியின் படத்தை காண்பது வழக்கமாக வைத்திருந்தால் உங்களுக்கு செல்வம் பெருகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மகாலட்சுமி செல்வத்தை ஈர்க்கும் கடவுள் என்பதால் இவ்வாறு நம்பப்படுகிறது. காலையில் எழுந்ததும் கணவன், மனைவி ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதும் அந்த நாளை மகிழ்ச்சியாக மாற்றும்.
மந்திரங்களின் ஆற்றல்:
உங்கள் தினமும் படுக்கையில் இருந்து வெறுமனே எந்திரிக்காமல் கடவுளுடைய சில மந்திரங்களை உச்சரிப்பது நல்லது. உங்களுடைய நாளை இது சிறப்பாக மாற்றும். தீப ஒளியை பார்ப்பது உங்களுடைய நாளை மங்களகரமாக மாற்றும். கோயில் கோபுரம், ஆலய மணி ஓசை, பசு, கன்று குட்டி, இயற்கை காட்சிகள் அடங்கிய புகைப்படம், இசைக்கருவிகள், மஞ்சள், குங்குமம், விபூதி ஆகியவற்றை காலையில் காண்பதால் உங்களுடைய நாள் நன்றாக அமையும்.
இதையும் படிங்க: தினமும் காலை 5 மணி எழுந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..?
மறந்தும் காலையில் பார்க்கக் கூடாதவை:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D