வாழை மரத்துக்கும் வாஸ்து உண்டு..!! ஏன்னு... தெரிஞ்சுக்கோங்க..!!

By Dinesh TGFirst Published Dec 17, 2022, 1:19 PM IST
Highlights

வீட்டில் வாழை மரத்துடன் இந்தச் செடியை நட்டு வைத்து வளர்ப்பது செல்வத்தை அதிகரிக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மிகவும் மங்களகரமானதாக கருதப்படும் அந்த செடியை குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
 

ஜோதிட சாஸ்திரம் மற்றும் வாஸ்து படி வீட்டை கட்டுவது பல்வேறு வழிகளை நன்மையை தரும். அதன்மூலம் மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் போன்ற நல்ல காரியங்கள் அடுத்தடுத்து நமக்கு ஏற்படும். அதனால்தான் எல்லாவிதமான நிலை மற்றும் திசையை மனதில் வைத்து மக்கள் தங்களுடைய வீட்டில் பொருட்களை வைத்திருப்பது வழக்கம். வீட்டில் நடப்படும் மரங்கள் மற்றும் செடிகளுக்கும் வாஸ்து நடைமுறைகள் உள்ளன. வாஸ்து படி வாழை மரம் பிருஹஸ்பதி மற்றும் விஷ்ணுவின் இல்லமாக கருதப்படுகிறது. அதனால் அதை வாஸ்துப் படி நட்டு வளர்த்தால் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் ஏற்படுகிறது. அதன்படி வாஸ்து சாஸ்திரத்தில் வாழை மரம் குறித்து சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை தெரிந்துகொள்ளலாம்.

திசை முக்கியம்

மகிழ்ச்சி, செழிப்பு, சுய கட்டுப்பாடு, சாத்வீகம், ஆன்மீகம் மற்றும் திருமண மகிழ்ச்சியுடன் தொடர்புடைய கிரகமாக வியாழன் கருதப்படுகிறது. அதனால் வாழை மரத்தை வீட்டில் தவறான இடத்தில் வைத்தாலோ அல்லது சரியாக பராமரிக்காமல் இருந்தாலோ மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் எழும். இது தெரியாமல் வாழையை தவறான இடத்தில் நடவு செய்தால், அதற்கு விஷ்ணுவின் அருள் கிடைக்காது என்கிற நம்பிக்கையும் நிலவுகிறது.

நடவு நடைமுறை

தமிழ் சமுதாயத்தில் வாழை மிகவும் மங்களகரமான மரமாகும். எனவே இந்த செடியை வீட்டின் வடகிழக்கு மூலையில் நட வேண்டும். ஒருவேளை அங்கு இடம் சரியாக அமையவில்லை என்றால், கிழக்குப் பகுதியில் நடலாம். வாழை செடியை வீட்டின் முன்புறம் அல்ல, பின்புறம் தான் நட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், வாஸ்து தோஷம் ஏற்படாமல் இருக்க வாழை மரத்தைச் சுற்றி தூய்மையுடன் இருக்க வேண்டும்.

வாழைக்கு அருகில் துளசி

வாழை மரத்தின் அருகில் துளசி செடியை நட்டு வளர்ப்பது மிகவும் விசேஷமாகும். கடவுள் விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்த செடியாக துளசி விளங்குகிறது. எனவே, வீட்டில் வாழையை நட்டால், அதற்கு அருகில் துளசியை நடுவது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் அந்த வீட்டுக்கும், வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் விஷ்ணுவின் அருள் நிலைத்திருகும். இதன்மூலம் தேவைக்கேற்ப வாழைக்கு தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சுவதும் எளிதாக இருக்கும்.

நிதி நெருக்கடியை நீக்கும் மஞ்சள் வைத்தியம்- தெரிந்துகொள்ளுங்கள்..!!

வாழைக்கு அருகில் மஞ்சள்

ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் வாழை செடிக்கு மஞ்சள் பூசி வழிபாடு நடத்த வேண்டும். இதன்மூலம் வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு நீடித்திருக்கும். மேலும் இரவில் இந்த செடிக்கு அருகில் நெய் தீபம் ஏற்றி வந்தால், விஷ்ணுவின் அருளைப் பெறலாம். வாழை மரத்தின் தண்டில் எப்போதும் சிவப்பு அல்லது மஞ்சள் சரம் கட்டப்பட வேண்டும்.

செய்யக்கூடாதவை

  • வாஸ்து படி, வாழை செடியை வீட்டின் தென்கிழக்கு திசையில் நடக்கூடாது. அதேபோன்று தெற்கு அல்லது மேற்கு திசையில் நடக்கூடாது.
  • வீட்டின் பிரதான கதவுக்கு முன் வாழை செடியை நட வேண்டாம். ரோஜாவாக இருந்தாலும், வாழைக்கு அருகில் முள் செடியை நடக்கூடாது.
  • மரத்திலிருந்து அழுகும் அல்லது காய்ந்த இலைகளை விரைவில் அகற்றவும். வாழைக்கு எப்போதும் சுத்தமான தண்ணீரை மட்டுமே பாய்ச்ச வேண்டும். 
  • வாழை மரத்துக்கு அழுக்குத் தண்ணீர், குளியலறை கழிவுகள், பயன்படுத்தப்பட்ட தண்ணீரை விடக்கூடாது. வாழை மர பூஜையில் பயன்படுத்தப்படும் பூக்கள் அல்லது இலைகளை உடனடியாக அகற்றிவிடுவதும் சிறப்பு.
     
click me!