திருச்செந்தூர் முருகன் கோவில் அள்ள அள்ள தங்கம்! கோடிகளில் குவிந்த உண்டியல் காணிக்கை! வியந்த பக்தர்கள்!

By vinoth kumar  |  First Published Aug 10, 2024, 11:38 AM IST

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எத்தனை கோடி கிடைத்துள்ளது என தகவலை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல் காணிக்கை  மாதந்தோறும் இரண்டு முறை எண்ணப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை வசந்த மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

Latest Videos

undefined

இதையும் படிங்க: பயணிகள் கவனத்திற்கு! இந்த 3 நாட்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காது! தெற்கு ரயில்வே!

கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர்(பொறுப்பு) கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது.  உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர்கள், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக் குழுவினர்கள் ஈடுட்டனர்.

இதையும் படிங்க:  ஆம்ஸ்ட்ராங் கொலை! கூட இருந்தே கழுத்தறுத்துட்டாங்க! மக்கள் கேள்வி கேட்டதால் அரசு பயந்து போச்சு! பா.ரஞ்சித்!

இதில் கோயில் உண்டியலில் ரூ. 5 கோடியே 82 லட்சத்து 68 ஆயிரத்து 146 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. 3 கிலோ 787 கிராம் தங்கமும், 49 கிலோ 288 கிராம் வெள்ளியும், செம்பு 13 கிலோ 500 கிராம், தகரம் 8 கிலோ 500 கிராம் காணிக்கையாக கிடைத்தது. மேலும் 1535 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!