Amavasai vVgetables : அமாவாசை நாளில் சமையலில் சேர்க்க வேண்டிய காய்கறிகளும் அதன் முக்கியத்துவம் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
அம்மாவாசை நாளில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இப்படி செய்வதன் மூலம் சந்ததிகள் நல்லா இருப்பார்கள் மற்றும் வீட்டில் சுப காரிய தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். அந்த வகையில் அமாவாசை நாளில் சில வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, வீட்டில் சுப காரியங்கள் நடத்தக்கூடாது, சுமங்கலிகள் விரதம் இருக்கக் கூடாது என்பது போலவே, ஒரு குறிப்பிட்ட காய்கறிகள் மட்டுமே சமைக்க வேண்டும் என்பதும் நியதி. அப்படி சமைக்கப்படும் காய்கறிகள் அமாவாசை காய்கறிகள் என்று அழைக்கப்படுகிறது.
அமாவாசை காய்கறிகள்:
undefined
அமாவாசை நாளில் கண்டிப்பாக சமைக்க வேண்டிய காய்கறிகள் மற்றும் சமைக்க கூடாத காய்கறிகள் என உண்டு. அதில் அமாவாசை விரத சமையல் மற்றும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும்போது சரி, அந்தணருக்கு கொடுக்கும் பொருட்களில் வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும். வாழையடி வாழையாக நம் குலம் வளர வேண்டும் என்பதற்காக இது பயன்படுத்தப்படுவதாக சிலர் சொல்லுகிறார்கள். அதுபோலவே அமாவாசை நாளில் பாகற்காய், பிரண்டை, பாலாக்காய் கண்டிப்பாக சமைக்க வேண்டும் என்றும் புராணக்கதை ஒன்று உள்ளது.
புராணக்கதை:
ஒரு சமயம் வசிஷ்ட முனிவர் விசுவாமித்திரரை சந்தித்து தனது வீட்டில் சிராத்தம் செய்ய உள்ளதால் தன் வீட்டிற்கு தாங்கள் உணவு சாப்பிட வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். வசிஷ்ட முனிவரின் இந்த அழைப்பை ஏற்ற விசுவாமித்திரர், தனக்கு 1008 காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்க வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வசிஷ்ட முனிவர் 1008 காய்கறிகளா? அத்தனை வகை காய்கறிகளையும் எங்கு போய் தேடி கண்டுபிடிப்பேன்? எப்படி சமைப்பது? என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனால், அவருக்கு அருகில் இருந்து அவரது மனைவி அருந்ததி, விசுவாமித்திரரின் வார்த்தைகளை ஏற்று, நீங்கள் கூறியபடியே 1008 காய்கறிகளைக் கொண்டு சமைத்து பரிமாறுகிறேன் சுவாமி, என்று பணிவுடன் பதில் அளித்தாள்.
சிரார்த்தம் கொடுக்கும் நாளும் வந்தது. வசிஷ்ட முனிவர் வீட்டிற்கு உணவு சாப்பிட வந்தார் விசுவாமித்திரர். வாழை இலைகள் போட்டு உணவுகளை பரிமாற தொடங்கினால் அருந்ததி. முதலில் எட்டு வாழைக்காய் களை வைத்தால் பிறகு பாகற்காய் பிரண்டை பாகாய் என பரிமாறு முடித்துவிட்டு 108 காய்கறிகளை பரிமாறிவிட்டேன். உணவு அருந்துகள் சுவாமி என பணிவுடன் விஸ்வாமித்திரரிடம் வேண்டினாள் அருந்ததி. ஆனால் ஆத்திரமடைந்த அவர், என்ன இது? நான் 108 காய்கறிகளை சமைத்து பரிமாற சொல்லி கேட்டேன், ஆனால், நீ எனக்கு வெறும் 4 காய்கறிகள் மட்டும் பரிமாறிவிட்டு, 108 காய்கறிகள் பரிமாறி விட்டேன் என சொல்லி என்னை அவமானப்படுத்துகிறாயா? என்று கோபமடைந்தார்.
அதற்கு அமைதியாக பதிலளித்த அருந்ததி, 'சுவாமி தாங்கள் அறியாதது எதுவுமே இல்லை; அனைத்தும் அறிந்த நீங்களே இப்படி கோபப்படலாமா? "காரவல்லி சதம் ப்ரோக்தம் வஜ்ரவல்லி சத்ரயம் பநஸ: ஷ்டசதம் ப்ரோகதம் ஸ்ராக்கத்த காலே விதீயதே" என சாஸ்திரங்கள். அதாவது பாகற்காய் 1000, காய்கறிகளுக்கும், பிரண்டை 300 காய்கறிகளுக்கும், பாலாக்காய் 600 காய்கறிகளுக்கும் சமம். இவையே ஆயிரம் காய்கறிகள் ஆகிவிட்டது. இதனுடன் 8 வாழக்காயை வைத்துள்ளேன். மொத்தம் 1008 காய்கறிகள் ஆகிவிட்டது என்று அருந்ததி கூறினாள்.
இதைக் கேட்டு சாந்தமடைந்த விசுவாமித்திரர் அருந்ததியின் புத்திகூர்மையையும், சாஸ்திர முறைப்படி நடக்கும் அவளது குணத்தையும் கண்டு வியந்து அருந்ததியையும், வசிஷ்டரையும்
ஆசீர்வதித்து அங்கிருந்து சென்றார். இப்படி சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள காரணத்தினால்தான், இந்த நான்கு காய்கறிகளும் உயர்வாக கருதப்பட்டு, அமாவாசை நாளில் சமைக்கும் முக்கிய காய்கறிகளாக இடம் பெற்றுள்ளது.