Amman Worship : எந்த அம்மனை வழிபட்டால் என்ன பிரச்சினைகள் தீரும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்துக்களில் முக்கிய வழிபாட்டில் அம்மன் வழிபாடு அடங்கும். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட மிகவும் ஏற்ற நாள் என்பதால், வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் சென்று அம்மனை தரிசனம் செய்வார்கள். அம்மனை முழு மனதுடன் நினைத்து வணங்கினால் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். அம்மனின் அருளை பெற்றவர்களுக்கு எவ்வித இடையூறும் வராது என்பது ஐதீகம். மேலும், பயபக்தியுடன் அம்மனை வழிபட்டால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்குமாம். அந்த வகையில் அம்மனுக்கு பல வடிவங்களும், பல பெயர்கள் கொண்ட கோயில்களும் உள்ளது. இப்படி பல வடிவங்களைக் கொண்ட எந்த அம்மனை வழிபட்டால் என்ன பிரச்சினைகள் தீரும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
எந்த அம்மனை வழிபட்டால் என்ன பிரச்சினைகள் தீரும்:
1. விருதுநகரில் இருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் சிவாம்சம் கொண்டவள் என்பதால், கருவறையில் அம்மனுக்கு முன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி இருக்கும். கண் நோய் பிரச்சினை உள்ளவர்கள் இங்கு இருக்கும் தேவிக்கு அபிஷேகம் செய்து, நீரால் கண்களைக் கழுவினால் கண் நோய் விரைவில் நீங்கும்.
2. மதுரை சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் இருக்கிறாள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலில் வழகப்படும் பிரசாதமான தீர்த்தத்தை அருந்தினால் அம்மை நோய் விரைவில் மறையும்.
3. மதுரை எல்லீஸ் நகரில் இருக்கும் கருமாரியம்மனை வணங்கினால் அனைத்து விதமான நலன்களும் பெறலாம்.
4. புதுக்கோட்டை நார்த்தாமலையில் முத்து மாரியம்மன் அருளாட்சி புரிகிறாள். இங்கு இருக்கும் அம்மனுக்கு தீ காவடி எடுத்தால் தீராத நோயும் தீரும் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த அம்மன் கோவிலில் கரும்புத் தொட்டில் கட்டினால் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.
5. நீலகிரி மாவட்டம் குன்னூரில் தந்திமாரியம்மன் திருவருள் புரிகிறாள். மழை இல்லாமல் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால், உடனே இந்த அம்மனை முழுமனதுடன் வேண்டிக்கொண்டால், பெருமழை பெய்யும்.
6. ஊட்டியில் மகாமாரி மற்றும் மகாகாளி என இருவரும் ஒரே கருவறையில் இருந்து பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர். இங்கு இருக்கும் காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறை வாங்கினால், தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் என அனைத்தும் விலகி ஓடும்.
இதையும் படிங்க: ஆடி மாத ஸ்பெஷல் அம்மன் கூழ்.. இனி வீட்டிலேயும் செய்யலாம்.. ரெசிபி இதோ!
7. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு சென்றால் நித்யசுமங்கலி மாரியம்மனை தரிசன செய்யலாம். வருஷம் முழுதும் அம்மனின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர் வந்தது. முக்கியமாக, இங்கு ஐப்பசி மாதமஎ அன்று புதுக் கம்பம் நடுவார்கள். அப்போது, தயிர்சாதத்தை பிரசாதமாக வழங்குவார்கள். அதை சாப்பிடால் அடுத்த வருடமே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
8. கோவை மாவட்டத்தில் ஆட்சிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும், தீராத நோய்களைத் தீர்க்கவும் அருள் புரிகிறாள்.
9. சமயபுரம் மாரியம்மன் ஒவ்வொரு மாசி மாதமும் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் விரதம் இருப்பாள். சுமங்கலி பாக்கியம் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்தி சுமங்கலி பாக்கியத்தை பெறுவார்கள்.
10. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் திருமணத்தில் தடை உள்ளவர்கள், மஞ்சள் கயிறு வாங்கி, அதை அம்மன் சந்நதிக்கு பின் இருக்கும் வேப்பமரத்தில் கட்டி வேண்டிக் கொண்டால், விரைவில் திருமணம் நடக்கும்.
இதையும் படிங்க: Aadi Koozh Festival in Tamil : ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன் தெரியுமா?
11. திருப்பூரில் அருளாட்சிபுரியும் கோடீஸ்வரி மாரி என்ற கோட்டைமாரியின் கருவறையில் அம்மனின் இரு புறங்களிலும் லட்சுமி தேவி, சரஸ்வதி என இருவரும் அம்மனைப் போலவே சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார்கள். இங்கு இருக்கும் அம்மனிடம் பூவாக்கு கேட்பது இந்த கோவிலின் தனிச் சிறப்பாகும்.
12. தேனி மாவட்டம் பெரிய குளத்தில் இருக்கும் கௌமாரியம்மனுக்கு தானியங்கள், காய்கறிகள், கனிகளைப் படைத்தால், விவசாயம் செழிக்கும்.
13. கரூர் மாவட்டம் மகா மாரியம்மன், வழக்கு மற்றும் வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று வேண்டினால் அவள் அருள்வாள்.
14. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கோட்டை மாரியம்மனை வேண்டி உப்பையும் மஞ்சளையும் கொடிமரத்திற்கு சமர்ப்பித்தால், வேண்டுதல்கள் அனைத்து. நிறைவேறும்.
15. தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன், துளஜா மன்னர் மகளின் கண் நோய் தீர்த்தார். புற்றுருவாயிருந்த இந்த அம்மனுக்கு யந்திரப் பிரதிஷ்டை செய்தவர் நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரர ஆவார்.
16. காரைக்குடி மாவட்டம் முத்துப்பட்டினம் மீனாட்சிபுரத்திலுள்ள முத்து மாரியம்மனுக்கு தக்காளியை காணிக்கையாகவோ அல்லது அதில் அபிஷேகம் செய்யப்ப்
17. கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவிலில் மார்கழி திருவாதிரையன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டும். பின் சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படும்.
18. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பெரிய மாரியம்மன், வெப்ப நோய்களை நீக்குபவள். அம்மை நோய் இருப்பவர்களையும் அன்னை குணப்படுத்துகிறாள்.
19. கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோவிலில் மண் சட்டியில் நெருப்பை ஏந்தி வரும் பூசாரியை தரிசித்தால் வாழ்வு வளம் பெறும்.
20. ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் இருக்கும் சின்ன மாரியம்மன் குழந்தை பாக்கிய வரம் அருள்கிறாள். மேலும், இங்கு வழங்கப்படும் விபூதி பிரசாதத்தை நெற்றியில் பூசி, பின் தண்ணீரில் கலந்து குடித்தால், நோய்கள் நீங்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D