வீட்டில் இந்த 1 விளக்கு ஏற்றினால் போதும்.. பிள்ளைகள் வாழ்க்கையில் நல்லா இருப்பாங்க..

Published : Aug 08, 2024, 09:18 AM ISTUpdated : Aug 08, 2024, 10:49 AM IST
வீட்டில் இந்த 1 விளக்கு ஏற்றினால் போதும்.. பிள்ளைகள் வாழ்க்கையில் நல்லா இருப்பாங்க..

சுருக்கம்

Deepa Valipadu For Children's Good Future :  உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமெனில், தெய்வத்தின் அருள் கிடைக்க இந்த ஒரு தீபத்தை மட்டும் ஏற்றினால் போதும்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் எவ்வித குறைவுமின்றி, நலமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், எவ்வளவுதான் பெற்றோர்கள் கடினமாக உழைத்தாலும், குழந்தைகளுக்குள் ஒருவித எண்ணம் உருவாக வேண்டும். அந்த எண்ணம் மனிதர்களாய் நம்மால் உருவாக்க முடியாது. ஆனால், தெய்வீக சக்தியால் மட்டுமே முடியும். ஆகையால், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமெனில், தெய்வத்தின் அருள் கிடைக்க ஒரு தீபத்தை மட்டும் ஏற்றினால் போதும். அது என்ன தீபம் என்று, விரிவாக இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க ஏற்ற வேண்டிய தீபம்:

பொதுவாகவே, நாம் நம்முடைய தேவைகளுக்காக, கஷ்டங்கள் தீர அல்லது நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக தான் தீபா வழிபாடு செய்வது வழக்கம். அதுபோலவே, குழந்தைகளின் வாழ்க்கையிலும் எவ்வித தடைகளுமின்றி, அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைவதற்காக தீபம் ஏற்றலாம். இந்த தீபத்துடன் ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் வீட்டில் எதிர்மறை சக்திகள் நீங்கும் மற்றும் கண் திருஷ்டியும் விலகி ஓடுமாம்.

இதையும் படிங்க:  வீட்டில் விளக்கேற்றும் முன் இந்த விஷயங்களை முதலில் தெரிஞ்சுக்கோங்க..!!

தீபம் ஏற்றும் முறை: 

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முதலில் ஏதாவது ஒரு விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் வீட்டிற்குள் எந்த இடத்தில் விளக்கி ஏற்றப் போகிறீர்களோ, அந்த இடத்தில் கல் உப்பை பரப்பி அதன் மேல் விளக்கை வைக்கவும். இப்போது விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். தீபம் இயற்றிய பிறகு இரண்டு கல் உப்பை அதில் போடவும் பிறகு இரண்டு மிளகாய் வற்றலை தீபம் எரியும் இடத்திற்கு பக்கத்தில் வைக்கவும். 

இதையும் படிங்க:  நீங்க நினைத்தது நடக்க...ஓகோனு வளர... "வெற்றிலை" வைத்து இந்த வழிபாடு செய்யுங்க..!!

தீபம் ஏற்றி முடித்த பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். பாதியாக வெட்டிய எலுமிச்சை பழத்தின் ஒரு துண்டில் கல் உப்பையும், மறு துண்டில் குங்குமத்தையும் வைக்கவும். பிறகு வீட்டிற்கு வெளியே சென்று நிலை வாசலுக்கு முன்பாக நின்று, இரண்டு கைகளில் இருக்கும் எலுமிச்சை பழத்தை கொண்டு வீட்டை திருஷ்டி சுற்றுவது போல் வலது புறமும் இடது புறமும் மூன்று முறை சுற்றுங்கள். பிறகு வலது புற கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை இடது புறமாகும், இடது புற  கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை வலது புறமாகவும் தூக்கி எறியவும். பின் உங்களது கை கால் முகத்தை கழுவிக்கொண்டு வீட்டிற்குள் செல்லுங்கள்.

இப்படி திருஷ்டி சுற்றினால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும், கண்திருஷ்டியும் விலகி ஓடும். மேலும், குழந்தைகளின் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடைகளும் சுலபமாக நீங்கும். இந்த தீபத்தை நீங்கள் தொடர்ந்து ஏற்றி வந்தால், விரைவிலே உங்கள் வீட்டில் மற்றும் உங்களுடைய குழந்தைகளின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!