தாலி கயிறு எந்த கிழமையில்... எந்த நேரத்தில் மாற்றுவது நல்லது?!

By Kalai Selvi  |  First Published Aug 10, 2024, 9:14 AM IST

Thali Kayiru  : தாலி கயிற்றை எப்போது? எந்த கிழமையில் மாற்ற வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.


தாலி இந்து மதத்தில் மிகவும் புனிதமாக பார்க்கப்படுகிறது. பொதுவாகவே, சிலர் தாலியை மஞ்சள் கயிற்றிலும், இன்னும் சிலர் தங்கத்திலும் அணிந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வருடத்திற்கு இரண்டு முறை தாலிக்கயிற்றை மாற்றுவது வழக்கம். ஆடிப்பெருக்கு அவற்றில் முக்கியமான நாளில் ஒன்றாகும். ஒருவேளை அந்நாளில் தாலி கயிற்றை மாற்ற தவறினால், அதை எப்போது, எந்த கிழமையில் மாற்ற வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இது குறித்து விரிவாக இங்கு நாம் பார்க்கலாம்.

தாலி கயிற்றை எந்த கிழமையில் மாற்ற வேண்டும்?
பொதுவாகவே, நாம் தாலிக்கயிற்றை  அடிக்கடி மாற்றவே கூடாது. தாலி கயிறு பழுதாகி மங்கி போனால் மட்டுமே அதை மாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி தாலி கயிற்றை திங்கள் செவ்வாய் வியாழன் ஆகிய தினங்களில் மட்டுமே மாற்ற வேண்டும்.

Latest Videos

undefined

இதையும் படிங்க:  பண்ணாரி மாரியம்மன் தாலிக் கயிறு அறுந்ததாக தகவல்: பெண்கள் விளக்கேற்றி வழிபாடு!

தாலிக்கயிற்றை மாற்றும்போது எந்த திசை நோக்கி மாற்ற வேண்டும்?
தாலிக்கயிற்றை மாற்றும்போது திசை மிகவும் முக்கியம் என்பதால் நீங்கள் கிழக்கு திசை நோக்கி பார்த்து தான் தாலிக்கயிற்றை மாற்ற வேண்டும். முக்கியமாக, தாலி கயிற்றை மாற்றும்போது சுமங்கலியாக இருக்கும் பெரியவர்கள் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும். மேலும் தாலிக்கயிற்றை மாற்றும்போது எக்காரணம் கொண்டும் பாதையில் எழுந்திருக்கக் கூடாது. தேவையான பொருட்கள் அனைத்தையும் அருகில் வைத்துவிட்டு பிறகு மாற்றுங்கள்.

இதையும் படிங்க:  இந்து திருமணத்தில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சு போடப்படுகிறது ஏன் தெரியுமா? 

இவற்றை அருகில் வைக்கவும்:
திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்து அதை உங்களுக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். 

இவற்றை நினைவில் வைத்துக்கொள்:
தாலி கயிறு மாற்ற காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீராடி விட்டு பின் தாலியை மாற்றுங்கள். தாலியை மாற்றிய பிறகு அதில் பூ, மஞ்சள், குங்குமம் வைத்து விட்டு, பூஜை அறைக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பிறகு மற்ற வேலைகளை செய்யுங்கள். முக்கியமாக, தாலிக்கயிற்றை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மாற்றவே கூடாது. பிரசவமான பிறகே அவர்கள் மாற்ற வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!