கண் திருஷ்டி பிரச்சனையா? எப்போது திருஷ்டி சுற்றி போட வேண்டும்? எது உகந்தநாள்?

By Ramya s  |  First Published Oct 16, 2023, 12:58 PM IST

கண் திருஷ்டி நீங்க எப்போது திருஷ்டி சுற்ற வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 


கல்லடியில் இருந்து தப்பினாலும், கண்ணடியில் இருந்து தப்ப முடியாது என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதை அடிக்கடி கேட்டிருப்போம். ஆம். ஒரு வீட்டில் கண் திருஷ்டி பிரச்சனை இருந்தாலே, திடீரென வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு மாறி மாறி உடல்நல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். திடீர் பணக்கஷ்டம், மன ரீதியான கஷ்டம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடக்காது. தொழிலில் எந்த முன்னேற்றமும் இருக்காது. கண் திருஷ்டி காரணமாகவே இந்த பிரச்சனைகள் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.

இதற்காக தான் திருஷ்டி சுற்றிப் போடும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர். திருஷ்டி பரிகாரம் என்பது தொன்று தொட்டே இருந்து வரும் பழக்கமாகும். எனவே கண் திருஷ்டி நீங்க எப்போது திருஷ்டி சுற்ற வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கண் திருஷ்டி நீங்க, தெரு மண், உப்பு, மூன்று மிள்காய், கடுகு சேர்த்து, கிழக்கு நோக்கி அமர்ந்து வீட்டில் உள்ள எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டு விட வேண்டும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டுமே இதனை செய்ய முடியும். நம் வீட்டிற்குள் தீய சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும் கண் திருஷ்டி விலகவும், பௌர்ணமி தினத்தன்று வீட்டு வாசலில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம்.

வாரத்தின் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் உள்ள அனைவரையும் கிழக்கு நோக்கி அமர்ந்து உட்கார வைத்து திருஷ்டி கழிப்பார்கள். மேலும் உப்பு, மிளகாய், தேங்காய், எலுமிச்சை, பூசணி என பலமுறையில் திருஷ்டி கழிக்கலாம். சிலர் தேங்காய் மீது சூடமேற்றியும், சிலர் பூசணிக்காய் மீது சூடம் ஏற்றியும் தங்களுக்கு தெரிந்த முறையில் திருஷ்டி கழிப்பார்கள். எனினும் அமாவாசையன்று திருஷ்டி கழித்தால் அதிக பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வீட்டிற்குள் சிட்டுக்க்குருவி, புறா வந்தால் நல்ல சகுனமா? எந்த உயிரினங்கள் வந்தால் கெட்ட சகுனம்?

அதிலும் செவ்வாய்க்கிழமையில் அமாவாசை இணைந்து வரும் நாட்களில், மாலையில் திருஷ்டி கழித்தால் அதிக பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி செவ்வாய்க்கிழமையில் அமாவாசை வரும் நாட்களில் தவறாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி சுற்றி போடுங்கள். வீட்டில் உள்ள அனைவரையும் ஹாலில் கிழக்கு நோக்கி நிற்க வைத்து பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை இவற்றில் ஏதேனும் ஒன்றி சூடமேற்றி திருஷ்டி சுற்றி, தலைவாசலுக்கு முன்பு நின்று வீட்டிற்கு சுற்றி போட வேண்டும். பின்னர் முச்சந்தியில் பூசணிக்காயை உடைத்து, வீட்டிற்கு வந்து விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்போது அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சாமியை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு அமாவாசை நாளிலும் இதே போல் திருஷ்டி கழித்தால், வீட்டில் உள்ள எதிர்மறை சக்தி விலகி, வீட்டின் தரித்திரம் மாறும் என்பது நம்பிக்கை. மேலும் குடும்பத்தின் சுபிக்‌ஷம் நிலவும் என்று மகிழ்ச்சி, செல்வ வளமும் பெருகும்.

 

click me!