மகாளய அமாவாசை நாளில் வீட்டில் சமைக்கும் உணவுகளில் வாழைக்காய் தவறாமல் சமைக்கப்படுகிறது அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கு உகந்த நாள் அமாவாசை ஆகும். அந்நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதமிருந்து, தர்ப்பணம் கொடுத்து, அவர்கள் விரும்பும் உணவுகளை படைப்பது வழக்கம். மேலும் அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்தால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும், சந்ததிகள் காக்கப்படும் என்பது நம்பிக்கை.
அதுபோல் அமாவாசை நாளில் சமைக்கும் உணவை படையல் வைத்து நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் விதமாக நாம் காக்கைகளுக்கு கொடுக்கிறோம். அந்நாளில் சமைக்க வேண்டிய காய்கறிகள் மற்றும் தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என தனி பட்டியலை அதற்கு உண்டு. பொதுவாகவே கீரை காய் கிழங்கு ஆகிய பொருட்கள் மட்டுமே சாப்பாட்டில் இருக்க வேண்டும். அவற்றில் மிகவும் முக்கியமானது தான் வாழைக்காய். ஏனென்றால், முன்னோர்களின் ஆசிர்வாதத்தால் நம் குலமும் சந்ததிகளும் வாழையடி வாழையாக தலைக்கே வேண்டும் என்பதற்காக தான் வாழைக்காய் தவறாமல் அந்நாளில் சமைக்கப்படுகிறது.
விஸ்வாமித்ரர் - வசிஷ்டர் கதை:
அதுபோல் அந்நாளில் பாகற்காய், பிரண்டை, பலாக்காய ஆகிய மூன்றையும் கண்டிப்பாக சமைக்க வேண்டும். இது குறித்து புராணத்தில் கதை கூட ஒன்று உள்ளது. அதாவது, ராஜ வம்சத்தை சேர்ந்த விஸ்வாமித்ரர் என்பவர் புகழ் பெற்ற ராஜரிஷி ஆவார். இவரின் கடுமையான தவப்பயனால் இவர் பிரம்மரிஷியாக உயர்ந்தார். மேலும் இவர் "வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி" என்ற பட்டத்தைப் பெற்றார். ஆனால் இப்படிப்பட்டத்தை இவர் பெறுவதற்கு முன் இவருக்கும் வஸிஷ்டருக்கும் மோதல் இருந்தது.
இதையும் படிங்க: அமாவாசையில் பிறந்தவர்கள் திருடனா? இது நிஜமா?
1008 வகை காய்கறி படையல்:
ஒருநாள் வசிஷ்டர், விஸ்வாமித்ரரை நோக்கி, தன் முன்னோர் திவசத்திற்கு தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு அழைத்தார். அதற்கு விஸ்வாமித்ரர், வருகிறேன், ஆனால் 1008 வகை காய்கறிகளை செய்து படைக்க வேண்டும் என்றார். விஸ்வாமித்திரர் தன்னை அவமானப்படுத்தவ இப்படிச் செய்கிறார் என்பதை அறிந்த வசிஷ்டரும், 1008 வகை காய்கறிகள் தானே தாராளமாக படைக்கலாம். அருந்ததியிடம் சொல்லலுகிறேன் என்றார்.
இதையும் படிங்க: சனி அமாவாசை அன்று "இந்த" பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்.. சனி தேவனின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள்!
திவசம் நாளில் கோபம் கொண்ட விஸ்வாமித்திரர்:
ஒருவழியாக திவசம் கொடுக்கும் நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் சாப்பிட அமர்ந்தார். அப்போது அவருக்கு முன் ஒரு வாழை இலையில் பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் என அந்த இலையில் எவ்வளவு வைக்க முடியுமோ அவ்வளவு வைக்கப்பட்டது. ஆனால் விஸ்வாமித்திரர் கேட்ட படி அதில் 1008 காய்கறிகள் இல்லாததால், அவர் கோபத்துடன் வசிஷ்டரைப் பார்த்து, 1008 காய்கறிகள் எங்கே? என்றார். அவரோ, தான் அருந்ததியிடம் சொல்லிவிட்டதாகவும், நீங்கள் அவளிடன் கேட்கும் படி கூறினார். இங்கு நடப்பதை அறிந்த அருந்ததி, "காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம் பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே" என்ற ஸ்லோகத்தை கூறிவிட்டு, இதற்கான அர்த்தம் உங்களுக்கு புரிந்திருக்குமே என்று விஸ்வாமித்திரர்ரிடம் கூறினாள். இதனைக் கேட்ட விஷ்வாமித்திரர் வாய் அடைத்துப்போனார். பின் அவர் எதுவும் பேசாமல் சாப்பிட்டு வாழ்த்திவிட்டுச் சென்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அருந்ததி பாடிய பாடலுக்கான அர்த்தம்:
பொதுவாகவே திதி அன்று சமைக்கப்படும் உணவில் பாகற்காய் 100 காய்களுக்கும், பிரண்டைத்துவையல் 300 காய்களுக்கும், பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் ஆகும். இவற்றுடன் வாழக்காய் சேர்த்தால் 1008 ஆகும். இதுவே அப்பாடலுக்கான அர்த்தமாகும். இதனால்தான் விஸ்வமித்தனர் வாயடைத்துப் போனார்.
மகாளய அமாவாசை 2023 :
இன்று மகாளய அமாவாசை என்பதால், உங்கள் முன்னோர்களுக்கு வைக்கும் படையலில் வாழைக்காய், பாகற்காய், பிரண்டை, பலாப்பழம் ஆகியவற்றை வைக்க மறக்காதீர்கள். மேலும் இந்நாளில், துவரம் பருப்பிற்கு பதிலாக பாசிப் பருப்பு வைத்து சமைக்க வேண்டும். அதுபோல் இந்நாளில், கீரை, முள்ளங்கி, உருளை, பீன்ஸ், கத்திரிக்காய், முட்டைக்கோஸ், சுரைக்காய், முருங்கை, கோவக்காய் போன்ற காய்களை சமைக்க கூடாது. கீரையில், அகத்திக் கீரை மட்டும் சமைக்கலாம்.