ஆடிப்பூரம் பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழாவில் ஆயிரக்கணக்கான திருமணமான பெண்கள் மற்றும் கர்பிணி பெண்கள் கலந்து கொண்டு பாராசக்தியம்மனை வழிபட்டனர்.
ஆடிப்பூரம் பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழாவில் ஆயிரக்கணக்கான திருமணமான பெண்கள் மற்றும் கர்பிணி பெண்கள் கலந்து கொண்டு பாராசக்தியம்மனை வழிபட்டனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கர்பிணி பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.
இதையும் படிங்க;- கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால் அது அபசகுணமா? பூ இருந்தால் என்ன பொருள்?
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் நேற்று அதிகாலையில் பராசக்தி அம்மன் திருக்கோயிலின் முன்பாக உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆடிப்பூர பிரமோற்சத்தின் முக்கிய நிகழ்வான வளைகாப்பு விழா அண்ணாமலையார் கோயிலில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயிலில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு பால், பழம், தேன், சந்தனம், விபூதி, ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூ மாலை அலங்காரம் செய்து தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு பராசக்தி அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல், ரவிக்கை துணி, மஞ்சள், குங்குமம், தாலி கயிறு மற்றும் மங்கள பொருட்களை பெற்று கொண்டனர்.
இதையும் படிங்க;- காகம் தலையில் தட்டினால் ஆபத்தா? உடனடியாக செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?
பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது, இந்த வளைகாப்பு விழாவில் திருமணமான பெண்கள் கலந்து கொண்டு தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி பராசக்தியம்மனை வழிபட்டு அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்களை வாங்கி அணித்தால் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐய்தீகம். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான புதுமண தம்பதியர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்று பராசக்தி அம்மனை வழிபட்டு அம்மனின் பிரசாதங்களை வாங்கிச் சென்றனர்.