திருப்பதி ஏழுமலையான் கோவில் 6 மாதத்திற்கு மூடப்பட உள்ளதாக இணையத்தில் செய்தி வெளியானது.
ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல்லாயிக்கணக்கானோர் தினசரியும் திருப்பதி வந்து செல்கின்றனர். பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து சில நிமிட நேரம் தரிசனம் செய்தாலும் மன திருப்தியுடன் செல்கின்றனர் பக்தர்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் 6 மாதத்திற்கு மூடப்பட உள்ளதாக இணையத்தில் செய்தி வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம், வேறு ஒரு மூலவரை ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெறும். இதற்கு முன்னர் 1957- 58 ல் புதிய தங்க தகடுகள் பொருத்தப்பட்ட போதும்,2018 ஆம் ஆண்டு பாலாலயம் நடைபெற்ற போதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.
இதையும் படிங்க..தனியாரிடம் செல்லும் என்எல்சி.. 2 ‘திமுக’ அமைச்சர்கள் காரணம் - பரபரப்பை கிளப்பும் அன்புமணி ராமதாஸ்!
எனவே அந்த சமயத்தில் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் தற்போது இருக்கும் மூலவரையும் வழிபடலாம். அதே நேரத்தில் பாலாலயம் செய்யப்பட்டு புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் மூலவரையும் வழிபடலாம். ஆனால் மூலவருக்கு நடத்தப்படும் கட்டண சேவைகள் அனைத்தும் ஏகாந்தமாக நடைபெறும். அதே நேரத்தில் உற்சவருக்கு நடத்தப்படும் கல்யாண உற்சவம், கட்டண பிரமோற்சவம் ஆகியவை உள்ளிட்ட கட்டண சேவைகளில் மாற்றம் ஏதும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலை வேறொரு இடத்துக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதி கோவிலில் ஏழுமலையான் தங்கியிருக்கும் இடம் ஆனந்த நிலையம். முழுவதும் தங்கத்தால் மேயப்பட்டுள்ளது. 839ம் ஆண்டில் பல்லவ மன்னன் விஜய தந்திவர்மன் கோவிலின் மூலஸ்தானத்துக்கு தங்க கவசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 8வது முறையாக அந்த தங்க கவசம் பிரித்து மாற்றியமைக்கப்டுகிறது.
இந்த கோபுரத்திற்காக 120 கிலோ தங்கம், 12,000 கிலோ செம்பு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. திருப்பதி வெங்கடேஸ்வரா பெருமாள் கோவிலில் ஆனந்த நிலையம் என்று அழைக்கப்படும் கர்ப்ப கிரகத்தில் உள்ள கோபுரத்தின் கவசம் மாற்றப்பட உள்ளது. இதற்காக 2023ம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டு 6 முதல் 8 மாதங்கள் வரை பணி மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கான மூடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க..TN Rain Alert : ஜனவரி 3 முதல் 5 வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை
பக்தர்கள் வழிபடுவதற்காக அருகே உள்ள இடத்தில் தற்காலிக கோவில் அமைக்கப்பட இருப்பதாகவும், இதற்கான பாலாலயம் வரும் பிப்ரவரி 23ம் நாள் நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கர்ப்ப கிரகத்தின் பகுதியை போன்றே ஒன்றை உருவாக்கி, பூஜைகள் செய்யப்பட்டு, விக்ரகம் மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போதுள்ள மூலஸ்தானத்தில் வழக்கம் போல பூஜைகள் செய்யப்படும்.
ஆனால் பக்தர்களுக்கு அந்த இடத்திற்கு செல்ல அனுமதி இல்லை. இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டம் கொடிவாலாசா என்ற கிராமத்தில் வசிக்கும் நீமாவாதி என்ற ஓய்வுபெற்ற செவிலியர், ஏழுமலையான் மீதுள்ள அன்பினால் தனக்கு சொந்தமான 1,600 சதுர அடியுள்ள வீட்டை தேவஸ்தானத்துக்கு வழங்கியுள்ளார். தற்போதைய மதிப்பின் படி, 70 லட்சம் பெறும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..BJP Vs DMK : திமுகவுக்கு தைரியம், திராணி இருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடுங்கள்.. தமிழக பாஜக அதிரடி!