கனவில் மயில் வருகிறதா..? அடுத்து இதுதான் நடக்கும்..!!

Published : Dec 28, 2022, 06:00 PM IST
கனவில் மயில் வருகிறதா..? அடுத்து இதுதான் நடக்கும்..!!

சுருக்கம்

நமக்கு வரும் கனவுகளுக்கு பல்வேறு அறிவியல் விளக்கங்கள் உள்ளன. மனிதன் மட்டுமின்றி பல்வேறு உயிரினங்களுக்கும் கனவுகள் வருவதற்கான அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. ஆனால் மெய்ஞானத்தில் கொடுக்கப்படும் விளக்கங்கள் நம்முடைய வாழ்வியலோடு தொடர்புடையவை ஆகும்.  

நம்முடைய கனவுகளில் தென்படும் காட்சிகளுக்கு ஒவ்வொரு அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. அதன்படி ஒவ்வொரு கனவுக்கும் விரிவான விளக்கங்களும் உள்ளன. சில கனவுகள் சம்மந்தப்பட்ட நபரின் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன. ஒருசிலருக்கு சில விலங்குகள் மற்றும் பறவைகள் கனவுகளில் அடிக்கடி வரும். குறிப்பிட்ட சில உயிரினங்கள் கனவுகளில் வருவதை அடுத்து, அந்த நபருடையே எதிர்காலம் கணிக்கப்படும். பல்வேறு சமயங்களில் அது மங்களகரமானதாகவும் மற்றும் அபசகுனமாகவும் இருக்கும். பலருக்கும் கனவுகளில் மயில் வருவது அபூர்வமானது தான். அந்த வகையில், கனவில் மயிலைக் கண்டால் அதனுடைய பலன்கள் என்ன என்பது குறித்து பலருக்கும் கேள்வி எழலாம். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வெள்ளை மயில்

ஒரு கனவில் ஒரு வெள்ளை மயிலை பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட நபருக்கு கனவில் மயில் வந்தால், அந்த நபர் விரைவில் பணக்காரர் ஆவார் என்று அர்த்தம். அதுவும் அதிர்ஷ்டத்தின் வாயிலாக அவருக்கு திடீரென்று பணம் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜோடி மயில்

நீங்கள் கனவில் ஜோடி மயில்களை ஒன்றாக பார்த்தால், வாழ்க்கையில் புதிய பாதை தோன்றும் என்று கூறப்படுகிறது. அதாவது கனவு கண்ட நபருக்கு அன்பின் வாசல் திறக்கும். அதன்மூலம் அவருக்கு புதிய உறவு தோன்றும் என்று அர்த்தம். திருமணமானால் திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் மற்றும் உங்கள் திருமண வாழ்க்கை வலுவடையும்.

கருப்பு மயில்

பொதுவாக கருநிறத்தில் மயில்கள் இருப்பது கிடையாது. நோய் பாதிப்பு ஏற்படும் போது மயில்களில் உடல் அமைப்பு அவ்வாறு மாறிவிடக்கூடும். அதுமட்டுமின்றி பெண் மயில்கள் சாம்பல் நிறங்களில் இருக்கும். சிலநேரம் அது கருப்பாகவும் தோன்றும். எனினும் தோகை வைத்த கருநிற மயில்களை பார்க்கும் போது சற்று திகிலாக தான் இருக்கும். கனவில் மட்டுமில்லாமல் நேரில் பார்ப்பதும் உகந்தது கிடையாது. அதனால் அடுத்து வரும் நாட்களை சற்று கவனத்துடன் எதிர்கொள்ளுங்கள்.

வீடுகளில் காலண்டர் மாட்டுவதற்கும் வாஸ்து பலன்கள் உண்டு- தெரிஞ்சுக்கோங்க..!!

ஆடும் மயில்

கனவில் நடனமாடு மயிலை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அது உங்களுடைய எதிர்காலத்தை மிகவும் திட்டமிட்டு நகர்த்த வேண்டும் என்கிற சமிக்ஞைக்கான பொருள். அதேசமயத்தில் நீங்கள் ஏதேனும் ஒரு காரியத்தை முடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கும் போது, கனவில் ஆடும் மயில் தோன்றுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அது நினைத்த காரியம் கைகூடும் என்பதை சுட்டிக்காட்டுவதாக பொருள்படுகிறது.

சண்டையிடும் மயில்

உங்கள் கனவில் சண்டையிடும் மயிலைக் கண்டால், எதிர்காலத்தை கருதி கவனமாக இருங்கள். மேலும், வாழ்க்கைச் சார்ந்த செயல்பாடுகள் மீது நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். உங்களுக்கு வேண்டாதவர்கள் ஏதேனும் தீங்கு செய்ய நேரிடலாம். அதேசமயத்தில் நிதி நெருக்கடி, கடன் சார்ந்த பிரச்னைகள் போன்றவை ஏற்படலாம்.
 

PREV
click me!

Recommended Stories

Spiritual: நொடியில் ஓடி மறையும் கடன் தொல்லை.! கோடீஸ்வர யோகத்தை தரும் பரிகாரங்கள்.!
Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!