வீடுகளில் காலண்டர் மாட்டுவதற்கும் வாஸ்து பலன்கள் உண்டு- தெரிஞ்சுக்கோங்க..!!

By Dinesh TGFirst Published Dec 28, 2022, 4:50 PM IST
Highlights

நீங்கள் 2023 ஆண்டு காலண்டரை வீட்டில் மாட்டி வைக்க முடிவு செய்திருந்தால், வாஸ்து தொடர்பான சில விதிகளை மனதில் கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரப்படி நாட்காட்டியை சரியான திசையிலும், இடத்திலும் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
 

உங்களுடைய வீடுகளில் வரும் 2023-ம் ஆண்டுக்கான காலெண்டரை மாட்டும் போது சில வாஸ்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி புத்தாண்டு காலண்டரை சரியான திசையில் மாட்டும் போது அது பலனை தரும். நாட்காட்டியை சரியான திசையில் மாட்டுவதன் மூலம், அது நல்ல அதிர்ஷ்டத்தை தருவதோடு மட்டுமில்லாமல், குறிப்பிட்ட ஆண்டு முழுவதும் ஏற்படும் பிரச்னைகளையும் தடுக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் நாட்காட்டியை எங்கு, எப்படி மாட்டுவது மற்றும் அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பழைய காலண்டர்கள் கூடாது

சில காரணங்களால் பலரும் நம்முடைய வீடுகளில் பழைய காலண்டர்களை மாட்டி வைத்திருப்போம். பழைய நாட்காட்டியை அப்படி மாட்டி வைத்திருப்பது அபசகுணமாகும். வாஸ்து படி அப்படி செய்வது நல்லது கிடையாது. அது வாழ்க்கையில் முன்னேற்ற வாய்ப்புகளை குறைக்கிறது.

புதிய காலண்டரை மாற்றவும்

வாஸ்து படி, 2023 புத்தாண்டு காலண்டரை வீட்டின் வடக்கு, மேற்கு அல்லது கிழக்கு சுவரில் வைப்பது எப்போதும் சரியானதாக கருதப்படுகிறது. புத்தாண்டு நாட்காட்டியை வீடு, அலுவலகம் அல்லது கடை போன்ற இடங்களில் மாட்டி வைப்பது முன்னேற்றத்தை காட்டும். நாட்காட்டியை தெற்கு திசையில் வைக்கக் கூடாது, இதைச் செய்வதன் மூலம், ஆரோக்கியம் நன்றாக இருக்காது மற்றும் முன்னேற்றம் தடைபடும்.

எந்தெந்த நேரத்தில் எல்லாம் உடலுறவில் ஈடுபடக் கூடாது? தெரியுமா உங்களுக்கு??

கிழக்கு திசையில் மாட்டலாம்

சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்பதால், சூரியனின் படத்துடன் கூடிய நாட்காட்டியை வைத்துக் கொண்டால் அதன்மூலம் நல்ல வாய்ப்புகள் ஏற்படும். மேலும் கிழக்கு பகுதியில் மாட்டப்படும் நாட்காட்டி குழந்தையின் வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான கதவுகளைத் திறக்கிறது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

2023 புத்தாண்டு காண்டர் எப்படி இருக்கலாம்?

ஒரு காலண்டர் பக்கம் எப்போதும் உதய சூரியன் அல்லது மகிழ்ச்சியை குறிக்கும் படங்கள் இருக்க வேண்டும். கொடூரமான விலங்குகளின் படங்கள், மகிழ்ச்சியற்ற முகங்கள் போன்றவற்றைக் கொண்ட நாட்காட்டியை ஒருபோதும் மாட்டாதீர்கள். அது வீட்டிற்கு எதிர்மறை சக்தியைக் கொண்டுவருகிறது. புத்தாண்டு காலண்டர் பச்சை, நீலம், வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறமாக இருக்க வேண்டும். அத்தகைய வண்ண காலண்டர்களை வைப்பது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது.
 

click me!