திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கியது

By Velmurugan sFirst Published Dec 24, 2022, 1:10 PM IST
Highlights

வைகுண்ட ஏகாதசியை முன்னட்டு திருமலை திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. சிறப்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றிதழை கொண்டு வரவேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 

வருகின்ற ஜனவரி 2ம் வைகுண்ட ஏகாதசி பெருநாள். அன்றைய தினம் திருமலை திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஏகாதசி நாள் தொடங்கி 10 தினங்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும். எனவே பக்தர்கள் வைகுண்ட ஏகாதசியன்று தொடங்கி 10 நாட்களுக்கு ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்வதற்கு வசதியாக 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேஸ்தான நிர்வாகம் இன்று காலை இணையதளம் வாயிலாக வெளியிட்டுள்ளது.

திருப்பதி வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் - தேவஸ்தானம் அறிவிப்பு

நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் 2 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் https://online.tirupatibalaji.ap.gov.in/login?flow=sed என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் செல்போன் எண்ணை கொடுத்து OTPஐ பதிவு செய்து உள்ளே நுழைய வேண்டும். பின்னர் நீங்கள் வரும் பாதையை தேர்வு செய்துவிட்டு உங்களுக்கு விருப்பமான நேரத்தை பதிவு செய்து தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். 

2 மணி நேரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

click me!