திருப்பதி வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் - தேவஸ்தானம் அறிவிப்பு

By Velmurugan sFirst Published Dec 24, 2022, 12:41 PM IST
Highlights

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது கொரோனா இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதியில் ஏகாதசி நாள் முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும். பொதுவாக தற்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு சுமார் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏகாதசியில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமத்துவம், சகோதரத்துவத்தின் விழா; பொது மக்களுக்கு முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

இந்நிலையில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள மாநில அரசுகள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிப்பு? அமைச்சர் விளக்கம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுடன் வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்தழை கொண்டு வர வேண்டும். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இல்லாதவர்கள் கோவிலுக்கு வரும் 48 மணி நேரத்திற்குள் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும். சான்றிதழ் இல்லாமல் வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திருமலை தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.

click me!