எப்போதும் இறைவனிடம் அன்பு செலுத்தி வணங்கி வருபவர்களிடம் ஆசி பெற்றால் பண வரவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் அதை மனதார செய்ய வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியம்.
இந்து மதத்தில் செல்வம் பெருகுவதற்கு லட்சுமி வழிபாடு நடத்துவது நல்ல பலனை தரும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட நாட்களில் கடவுள் லட்சுமிக்காக மேற்கொள்ளப்படும் பிரத்யேக வழிபாட்டு முறைகள் பண புழக்கத்தை அதிகரிக்கின்றன. அதற்கு வழிபாடு நடத்தக்கூடிய நபரின் ஜாதக பலன்கள் மற்றும் திசைகள் உள்ளிட்டவையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் வாழ்க்கையில் இருக்கும் தரித்திரம் விலகுவதற்கு குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு பசும் பாலில் இருந்து கிடைக்கப்பெற்ற தயிரை உடல் முழுவதும் தழுவி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். அதையடுத்து துண்டு வைத்து துடைக்கும் போது, முதுகில் இருந்து துடைக்க ஆரம்பிக்கவும். இதன்மூலம் தரித்திரம் விலகும் என்பது நம்பிக்கை.
அதேபோன்று வெள்ளிக்கிழமை அன்று சுக்ர ஓரையில் கடவுள் லட்சுமிக்கு சுண்டல், மொச்சை உள்ளிட்ட பயறுகளில் சமைத்து படைக்க வேண்டும். அதை குடும்பத்தினர் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு எதுவும் சாப்பிடத் தரக்கூடாது. இதன்மூலம் வழிபாட்டுக்கான பயன்கள் முற்றிலும் குடும்பத்தினருக்கே கிடைக்கும்.
மேலும் ஜாதகத்தின் லக்னத்தில் மூன்றில் சுக்ரன் நீசம் கொண்ட ஒருவரிடம் இருந்து, வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் பணம் பெற்றுச் செல்லவும். இதுவும் நல்ல பலன்களை வழங்கும். தினமும் குளிக்கும் போது பசுவின் கோமியத்தை நீரில் கலக்கவும். இதை தொடர்ந்து 45 நாட்கள் வரை செய்ய வேண்டும். அதன்மூலம் வீட்டிலிருந்து பிணி அகன்று தரித்திரம் விலகும்.
சாமந்தி முதல் ஊமத்தம் வரை- கடவுள் வழிபாட்டுக்கு உகந்த 5 மலர்கள்..!!
தொடர்ந்து, உடைக்காமல் இருக்கும் பாசிப்பருப்பை வெல்லத்தை கலந்த நீரில் ஊற வைக்க வேண்டும். ஒருநாள் முழுக்க ஊறவைத்து, அடுத்தநாள் காலையில் பறவை மற்றும் விலங்குகளுக்கு சாப்பிட தர வேண்டும். இதை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் பணத்தடை நீங்கும். ஒருவேளை உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும் பட்சத்தில், தொடர்ந்து இந்த நல்ல காரியத்தை நீங்கள் செய்துவரலாம்.
அதேபோல வெள்ளிக்கிழமை லட்சுமித் தேவி கோயிலுக்குச் சென்று அபிஷேகத்துக்கு பால் வழங்கலாம். பூஜை முடிந்ததும் கடவுள் சிலைக்கு பச்சை நிற வளையலை அணிந்திட வேண்டும். அபிஷேக பாலை வாங்கி வந்து, வீட்டிலுள்ள அனைவரும் குடிக்கலாம். எப்போது பெண்கள் தங்களுடைய இடது கை மோதிர விரலில் , வெள்ளி மோதிரத்தை அணிந்தால் பண வரவு அதிகரிக்கும்.
ஒருநாளில் சுக்ர ஓரை ஏற்படும் போது பசும்பாலை வில்வ மரத்துக்கு ஊற்றவும். இந்த காரியத்தை தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமை நாட்களில் செய்து வருவதன் மூலம் நிச்சயமாக வீட்டில் பண வரவு கூடும். பாசிப்பருப்பை மூட்டையாக கட்டி, தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். மறுநாள் அதை ஓடும் நிரீல் விட்டுவிட வேண்டும். இதன்மூலம் கடன் பிரச்னை இருந்தால், அது முழுமையாக நீங்கிவிடும்.