அம்மன் கோயில்களில் வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்கு எலுமிச்சைக் கனி பிரசாதமாக வழங்கப்படும். அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் பலருக்கும் குழப்பம் இருக்கும். அதுதொடர்பான தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
இந்து புராணங்களில் கடவுள் வழிபாட்டுக்கு உகந்த பழமாக எலுமிச்சைப் பழங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதனால் இதை தேவ கனி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. உடல் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் எலுமிச்சைப் பழத்தில் நல்ல சக்திகளை பெறுவதற்கும், தீய சக்திகளை அழித்தொழிப்பதற்குமான ஆற்றங்கள் உள்ளன. அதன்காரணமாகவே கோயில்களில் வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்கு எலுமிச்சைப் பழங்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. கோயில்களில் வழங்கப்படும் எலுமிச்சையை வீட்டுக்கு கொண்டு வந்து என்ன செய்யலாம் என்பதில் பலருக்கும் சந்தேகம் நிலவுகிறது. பலரும் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். வேறு சிலர் பூஜை அறையில் வைத்திருந்து காய்ந்தவுடன் தூக்கி எறிகின்றனர். இவை இரண்டுமே தவறு என்று ஆன்மிகவியலாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் கோயிலில் இருந்து கொண்டு வரும் எலுமிச்சையை என்ன செய்யலாம்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தெய்வ அருள்
undefined
பொதுவாக அம்மன் கோயில்களில், காளி வழிபாட்டுத் தலங்களில் எலுமிச்சைப் பழங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. கோயில்களில் இருந்து கிடைக்கும் எலுமிச்சைகள் கடவுள் அருளை பெற்றவையாகும். அதனால் அதை வீட்டுக்கு வந்து வழிபடுவது பலருடைய வழக்கம். ஆனால் எலுமிச்சை மூலம் கிடைக்கும் அருள் பக்தர்களை முழுமையாக சென்றடைய வேண்டும். கோயில்களில் இருந்து கிடைக்கும் பழத்தை வீட்டில் வெறுமனே வைத்தால் அருள் கிடைக்காது.
திருஷ்டி கழிக்கக்கூடாது
கோயில்களில் இருந்து கொண்டு வரப்படும் எலுமிச்சை பழங்களை என்ன செய்வது என்று தெரியாமல், பலரும் வீட்டு வாசலில் திருஷ்டியாக கட்டி வைத்துவிடுவார்கள் அல்லது வீட்டுக்கு திருஷ்டி கழித்துவிடுவார்கல். ஆனால் கோயிலில் இருந்து கொண்டு வரும் எலுமிச்சைப் பழங்களை அப்படி செய்யக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதேபோல திருஷ்டி ஏற்படாமல் இருக்க வாகனங்களிலும் கட்டிவைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் இதன்மூலம் எந்த பாதிப்பும் அல்லது பலன்களும் கிடையாது என்று கூறப்படுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட பழங்கள்
கோயில்களில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட பழங்கள் கிடைத்தால், அவற்றை திருஷ்டிக்கு பயன்படுத்த தேவையில்லை. சாறு பிழிந்து குடிக்கலாம். ஆனால் அதில் உப்பு சேர்க்கக்கூடாது. தேன் அல்லது சக்கரை கலந்து மட்டுமே குடிக்க வேண்டும். சமையலுக்கும் பயன்படுத்தக் கூடாது. உங்களுக்கு சக்கரை வியாதி இருந்தாலும் கோயில் எலுமிச்சைப் பழச்சாற்றில் உப்புக் கலந்து குளிக்கக்கூடாது. நீங்கள் குடிக்காவிட்டாலும் பரவாயில்லை, மற்றவர்களுக்கு குடிக்கக் கொடுங்கள். அது இன்னும் நன்மையை சேர்க்கும்.
வேறு என்ன செய்யலாம்?
கோயிலில் எலுமிச்சை விளக்கு போடுவதற்கு, நாம் தான் காசு போட்டு புதியதாக எலுமிச்சையை வாங்கி வர வேண்டும். ஆனால் வீட்டில் கண்டிப்பாக எலுமிச்சை தீபம் ஏற்றக்கூடாது. அதேபோல சுப காரியத்துக்கு செல்லும் போது, எலுமிச்சைப் பழத்தை கையில் வைத்து கொண்டு செல்லலாம் அல்லது காசு கொடுத்து வாங்கி கோயில் வாசலில் இருக்கும் திரிசூலத்தில் குத்தி வைத்துவிட்டு, நல்ல காரியத்துக்குபுறப்பட்டு போகலாம்.