பண்டைய காலத்திலிருந்து கடவுள் வழிபாட்டுக்கு உகந்த மலராக சில பூக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயத்தில் வெவ்வேறு வழிபாட்டுச் சடங்குகளுக்கு பல்வேறு வகையான மலர்களை பயன்படுத்தும் வழக்கமும் நம்மிடையே உண்டு. எனினும்எந்த நிகழ்வாக இருந்தாலும், சில மலர்கள் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். திருவிழாக்கள் முதல் பூஜை வரை, பந்தக்கால் முதல் இறுதி அஞ்சலி வரை குறிப்பிட்ட மலர்கள் அனைத்து நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த பதிவில் பூஜைக்கு உகந்த முக்கியமான 5 மலர்களை குறித்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
சாமந்திப்பூ
தமிழர் இல்லங்களில் சாமந்திப்பூ இல்லாமல் எந்தவிதமான சடங்கும் சம்பிரதாயமும் தொடங்காது மற்றும் நிறைவடையாது. அந்த வகையில் கடவுள் வழிபாட்டுக்கு என்று சாமந்திப்பூ பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது கடவுள் விநாயகருக்கு மிகவும் பிடித்த மலராக நூல்கள் கூறுகின்றன. சாமந்திப்பூ பல நிறங்களில் இருக்கின்றன. அதிலும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற சாமந்திப்பூ விநாயகர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மலராகும்.
மல்லிகை
நறுமணத்திற்கு பெயர் பெற்ற பூக்களில் மல்லிகைக்கு என்று தனி இடம் உண்டு. அதனுடைய வாசனை காரணமாக கடவுள் வழிபாட்டுக்கு மல்லிகை பூக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி மல்லிகை பூக்களை கடவுளின் சிலைகள் மற்றும் புகைப்படங்களுக்குச் சூடி வணங்கினால், அந்த வழிபாடு நடக்கும் வேளையில் தெய்வங்களும் வந்துபோகும் என்று நம்பப்படுகின்றன. இது கடவுள் ஆஞ்சநேயருக்கு மிகவும் உகந்தப் பூ. எப்போது ஆஞ்சநேயரை வழிபட்டாலும், மல்லிகைப் பூ கொடுத்து வணங்க வேண்டும். அப்போது நினைத்த காரியம் கைக்கூடும்.
செம்பருத்தி
பெரும்பான்மையான அம்மன் கோயில்களில் நாம் கண்டிருப்போம். எப்போது அம்மன் சிலைகளுக்கும் படங்களுக்கும் செம்பருத்தி பூக்கள் சூடி வழிபாடு நடத்தப்படும். அதற்கு காரணம் செம்பருத்திப் பூக்களில் அம்மன் வசிப்பதாக நம்பப்படுகிறது. அதுவும் வட இந்தியாக்களில் அம்மனுக்கு செம்பருத்தி பூ சூடி வணங்குவது மிகவும் விசேஷமாகும். அங்கு செம்பருத்தி பூக்களின் மகா காளியின் வடிவமாக பார்க்கப்படுகிறது. அதனால் அம்மனுக்கு விரதம் இருந்து, உறுதியான மனநிலையுடன் செம்பருத்தி பூ மாலைப் போட்டு வணங்கினால், உங்களை என்றும் தீயவைகள் அண்டாது.
தாமரை
முன்னொரு காலத்தில் தாமரைப் பூக்கள் விஷ்ணு மற்றும் கடவுள் லட்சுமிக்கு மட்டுமே சூடப்பட்டு வந்தன. ஆனால் இன்று அப்படியில்லை. தாமரை பூக்கள் பல தெய்வங்களுக்கு காணிக்கையாக்கப்படுகின்றன. அதேபோல அலங்காரத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. தாமரைப் பூக்களில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்ப்பப்படுகிறது. அதனால் எந்தவொரு நல்ல காரியத்துக்கும் தாமரை பூக்களை பயன்படுத்துவது நல்ல சகுனமாக கருதப்படும்.
வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு நடத்துவது எப்படி?
ஊமத்தம்
சிவ வழிபாட்டுக்கு உகந்த மலர் என்றால் பலருக்கும் தெரியாது. தென்நாடுடையே சிவனே போற்றி என்று வணங்கினாலும், எல்லாவிதமான தெய்வங்களுக்கும் காணிக்கையாக்கப்படும் செவ்வந்தி, சம்பங்கி மற்றும் அரளிப் பூக்களை மட்டும் வைத்து தான் சிவனை வழிபடுவோம். ஆனால் வட இந்தியாவில் நடைபெறும் சிவ வழிபாடுகளில் ஊமத்தம் பூ முக்கிய இடம் வகிக்கிறது. ஏனெனில் புராணங்களின்படி, பெருங்கடல் கலக்கும்போது சிவபெருமான் விஷத்தை அருந்தியபோது சிவபெருமானின் மார்பிலிருந்து ஊமத்தம் பூ வெளிப்பட்டது. அதனால் அது பெரும்பாலும் கடவுள் சிவன் வழிபாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.