பெண்களின் கூந்தலுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் பலன் கூறப்பட்டுள்ளது- உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்..!!!

By Dinesh TGFirst Published Dec 21, 2022, 7:06 PM IST
Highlights

உங்கள் தலையில் இருக்கும் முடியை வைத்து தான், உங்களது வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தில் முடி குறித்து கூறப்பட்டுள்ள பலன்கள் மற்றும் இழப்புகள் குறித்து விவரமாக தெரிந்துகொள்வோம்.
 

உங்கள் தலையில் இருக்கும் முடியை வைத்து தான், உங்களது வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தில் முடி குறித்து கூறப்பட்டுள்ள பலன்கள் மற்றும் இழப்புகள் குறித்து விவரமாக தெரிந்துகொள்வோம்.

தலை முடி என்பது நம் ஒட்டுமொத்த வெளித்தோற்றத்துக்கே பெருமை சேர்ப்பதாகும். தோலின் நிறம், முகத் தோற்றம் என உடலில் எந்த பிரச்னை இருந்தாலும் சரி தலைமுடி ஆரோக்கியமாக இருந்தால், ஒருவரது வெளித்தோற்றும் தானாகவே மெருகேறிவிடும். அதற்கு காரணம் தலைமுடியும் கிரகங்களுடன் தொடர்புடையது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இது பலருக்கும் புதிய தகவலாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அந்த வகையில் பெண்களின் கூந்தல் குறித்து ஜோதிட சாஸ்திரத்தில் என்னென்ன கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

முடி பற்றி ஜோதிட சாஸ்திரம் என்ன கூறுகிறது?

முடி உணர்திறன் ஒரு நபரின் புத்திசாலித்தனத்துடன் நேரடியாக தொடர்புடையது என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றன. இது லண்டனின் நடைபெற்ற ஆய்வின் மூலமமும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவ்வாய்வில் ஆராய்ச்சியாளர்கள் சில நூறு பெண்களின் முடி மாதிரிகளைப் பயன்படுத்தி அவர்களின் இயல்பு, குணம் மற்றும் திறன்களைக் கண்டறிந்தனர். ஒப்பீட்டளவில் நேர்த்தியான முடி கொண்ட பெண்கள் அதிக முக்கியமான அல்லது அதிக ஊதியம் பெறும் பதவிகளில் பணிபுரிய முனைகிறார்கள் என்பது தெரியவந்தது. 

வாழை மரத்துக்கும் வாஸ்து உண்டு..!! ஏன்னு... தெரிஞ்சுக்கோங்க..!!

மெல்லிய முடி

பெண்களுக்கு மெல்லிய முடி இருந்தால், சமூகம் சார்ந்த பணிகள் மற்றும் பிற ஆக்கப்பூர்வமான வேலைகளில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்று அர்த்தம். மாறாக, அடர்த்தியான முடி கொண்ட பெண்கள் சந்தர்ப்பவாதிகள் மற்றும் நிலையற்றவர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுப்பிடிக்கப்பட்டு இருந்தாலும், சாமுத்திரிகா சாஸ்திரத்தில் ஒல்லியான கூந்தலை உடையவள் ராணி போல் இருப்பாள் என்று எழுதப்பட்டுள்ளது.

கிரக பலன்கள்

கிரகங்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இந்தக் கோள்களில் சூரியன், சந்திரன், வியாழன், சுக்கிரன் மற்றும் ராகு ஆகியவை மூளை வளத்தை அதிகரிக்கும். மாறாக, செவ்வாய், புதன், சனி. சூரியன் புகழ், சந்திரன் மன வலிமை, வியாழன் ஞானம் மற்றும் புத்திசாலித்தனம், சுக்கிரன் அழகு மற்றும் ராகு நல்ல வாய்ப்புகளை குறிக்கிறது.

click me!