வளர்பிறை அஷ்டமி நாளில் காலபைரவரை வணங்குவது மிகவும் சிறப்பு. அப்போது நமக்கு தேவையான வேண்டுதல்களை அவர் முன் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
தமிழ் பாரம்பரியத்தில் வழிபாடு நெறிகள் அனைத்தும் தேய்பிறை திதிகளில் துவங்கப்பட்டு வளர்பிறை திதிகளில் நிறைவடையும். அதாவது ஒவ்வொருடைய வினைப்பயனும் தேய்பிறை திதிகளில் அழியத் தொடங்கி, வளர்பிரை திதிகளில் அவர்களுடைய தேவைகள் பூர்த்தியாகும் என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதுதான் தமிழ் பாரம்பரிய வழிபாட்டு பின்னணியில் இருக்கும் நெறியாகும்.
குறிப்பிட்ட காலக்கட்டத்தில் காலபைரவரை வணங்குவது மிகவும் விசேஷமாகும். பெரும்பாலானோர் வளர்பிறை அஷ்டமி அன்று வரும் ராகு காலத்தில் அவரை வணங்குகின்றனர். ஆனால் இந்து சாஸ்திரத்தில் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை என்று தெரிந்தவர்கள் கூறுகின்றனர். வளர்பிறை நாட்களில் அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் பைரவை வணங்கலாம்.
நீங்கள் வளர்பிறை அஷ்டமி நாளில் காலபைரவரை வணங்க முடிவு செய்துவிட்டால், அதற்கு முன்பாக வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபாடு செய்யக்கூடாது. அது தெரியாமல் நீங்கள் தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி என இரண்டு நாட்களிலும் வழிபாடு நடத்தினால் எந்தவிதமான பலன்களும் கிடைக்காது. இதை நினைவில் வைத்துக் கொண்டு தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வழிபாட்டு நெறிகளை கடைப்பிடியுங்கள்.