நம்முடைய ஒவ்வொரு வீடுகளிலும் உணவின் சுவையை அதிகரிக்க பூண்டு பயன்படுத்தப்படுகிறது. வெறும் உணவில் மட்டுமில்லாமல், வாழ்க்கையிலும் சுவையை கூட்டுவதற்கு பூண்டும் தேவைப்படுகிறது.
நமது நாட்டில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களை குறித்து ஜோதிட சாஸ்திரங்களிலும் பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு மசாலாப் பொருளும் ஒவ்வொரு கிரஹங்களுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. அதன்படி நாம் ஒவ்வொரு மசாலாப் பொருட்களையும் பயன்படுத்தும் விதம் மற்றும் செயல்பாடுகள் கிரஹத்தின் நிலையை தீர்மானிக்கிறது. பூண்டு ராகு கிரஹத்துடன் தொடர்புடையது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதனால் ஒருவருக்கு ராகு பலன்கள் குறையும் போது பூண்டு சாப்பிடுவது நல்ல தீர்வாக அமைகிறது. ஒருவேளை உங்களுடைய ஜாதகத்தில் ராகுவின் தோஷம் இருக்கும் பட்சத்தில், அதை தணிக்க பூண்டு சாப்பிடுவது நல்ல பலன்களை தரும். அதன்மூலம் ராகு தோஷம் நீங்கி நற்பயன்கள் உண்டாகும்.
1.) சனிக்கிழமை நாட்களில் மட்டும் உங்களுடைய பணப்பையில் பூண்டு வைத்திருப்பது நிதி நிலைமையை மேம்படுத்தும் எனவும், பண ஆதாயத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
2.) அதேபோல சனிக்கிழமை நாட்களில் மட்டும், 7 பல் பூண்டுகளை ஒரு குச்சியில் கட்டி வீட்டின் கூரையில் மாட்டிவைக்கவும். இதனால் குடும்பத்தில் ஏதேனும் சண்டைச் சச்சரவு இருந்தால் அது முடிவுக்கு வரும்.
3.) உங்கள் அலுவலக மேசையில் சனிக்கிழமை நாட்களில் மட்டும் 5 பல் பூண்டுகளை வைத்து வரவும். இதன்மூலம் தொழில்முடக்கம், பணப் பிரச்ச்னை, வேலைவாய்ப்பு பிரச்னைகள் உள்ளிட்டவை விலகும்.
4.) வணிகத்துக்காக பயன்படுத்தப்படும் பெட்டக்கத்தில் 5 பூண்டு பற்களை சனிக்கிழமை
தோறும் ஒரு மஞ்சள் துணியில் சுற்றி வைக்கவும். இது வியாபாரத்தில் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
5.) சனிக்கிழமையன்று, ஒரு முழு பூண்டை ஒரு கருப்பு துணியில் வைத்து, அதை அஸ்வத் மரத்தின் கீழ் புதைக்க வேண்டும். இதன் மூலம் பார்வை குறைபாடு விரைவில் குணமாகும்
6.) சனிக்கிழமை அன்று பூண்டை அரைத்து அதன் பொடியை தண்ணீரில் ஊற வைக்கவும். இதனுடன், உங்கள் வாழ்க்கையில் பிரச்னை இருக்கும் பட்சத்தில் அது விலகிவிடும்.
7.) சனிக்கிழமையன்று கடுகு எண்ணெயில் பூண்டை ஊறவைத்து வீட்டின் தெற்கு திசையில் வைக்கவும். இதனால், குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் எதுவும் வராது.
8.) சனிக்கிழமையன்று ஒருவருக்கு எள்ளுடன் பூண்டு தானம் செய்யுங்கள். இது வீட்டில் ராகுவின் தோஷங்களைக் குறைத்து நேர்மறையான ஆற்றலை பரப்பும்.
9.) கஷ்டப்பட்டு உழைத்தாலும், பணக் கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள், இரண்டு பல் பூண்டை ஒரு சிறிய சிவப்புத் துணியில் போட்டுக் கட்ட வேண்டும். அதை மண்ணில் புதைத்துவிடவும். இதன்மூலம் நிதி நெருக்கடி பிரச்னை உங்களை விட்டு விலகும்.
10.) சிலருக்கு இரவில் தூங்கும் போது மிகவும் பயங்கரமான கனவுகள் வரும். இது அவர்களின் முழு நாளையும் அழித்துவிடும். உங்களுக்கும் இதுபோன்ற பயங்கரமான கனவுகள் இருந்தால், படுக்கைக்குச் செல்வதற்கு முன் தலையணைக்கு அடியில் மூன்று பூண்டு பற்களை வைத்துக் கொள்ளலாம். காலையில் எழுந்து அவற்றைப் பக்கவாட்டில் எறிந்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் கெட்ட கனவுகள் வருவது நின்றுவிடும்.