பிளாஸ்டிக் சாமானம் முதல் பிஞ்சுபோன செருப்பு வரை- பொருளாதார முன்னேற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்..!!

By Dinesh TGFirst Published Dec 19, 2022, 9:34 AM IST
Highlights

குறிப்பிட்ட பொருட்கள் வீட்டில் இருந்தால் அது நிதி முன்னேற்றத்தை தடுப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த பொருட்களை குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
 

எவ்வளவு உழைத்தாலும் வெற்றி கிடைப்பதில்லை, என்ன செய்தாலும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை, நிதிநிலைகள் சரியாக இல்லை, எப்போதும் வீட்டில் சண்டைச் சச்சரவு தான் என்று பலரும் புலம்பி தவித்து வருகின்றனர். இப்படி நடப்பதற்கு வாஸ்து சாஸ்திரமும் முதன்மையான காரணமாக இருக்கலாம். வீட்டில் தேவையில்லாத பொருட்கள் குவிந்து கிடப்பது வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பிட்ட பொருட்களில் இருந்து எதிர்மறை ஆற்றல் வெளியாகி, அனைத்து வேலைகளையும் தடுப்பதாக நம்பப்படுகிறது. 

வீட்டில் வழிபாடு நடத்தும் அறையில்  கிழிந்த அல்லது பழைய படங்கள் அல்லது உடைந்த சிலைகள் இருந்தால், அவற்றை உடனடியாக அகற்றிவிடவும். இதனால் நிதி இழப்பு ஏற்படுகிறது. வீட்டில் கிழிந்த ஆடைகள் இருந்தால், அவற்றை அகற்றவும். ஏனெனில் இது வீனஸ் கிரகத்தை பலவீனப்படுத்துகிறது, இதனால் வாழ்க்கையில் நிதி சிக்கல் தொடங்குகிறது.

ஒரு புறா வீட்டில் கூடு கட்டினால், உடனடியாக அதை அகற்றவும். இது பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்துவதாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து கிழிந்த மற்றும் பழைய காலணிகள் மற்றும் செருப்புகளை உடனடியாக அகற்றவும். ஏனெனில், அவற்றை வீட்டிலேயே வைத்திருப்பது ஒரு நபர் பல போராட்டங்களை எதிர்கொள்ள வைக்கிறது மற்றும் நிதி நிலையில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

Palmistry : அதிர்ஷ்ட ரேகை உங்கள் கையில் ஓடுகிறதா? கவனமாக பார்த்துகொள்ளுங்கள்..!!

வீட்டில் மகாபாரதப் போர் படங்கள், நடராஜர் சிலை, தாஜ்மஹால் படம், மூழ்கும் படகு, நீரூற்றுகள், வன விலங்குகளின் படங்கள், கல்லறைகள், முள் மரங்களின் படங்கள் இருந்தால் அவற்றை அகற்றவும். இது எதிர்மறையான ஆற்றலை கொண்டு வருகிறது. மேலும் இதனால் வாழ்க்கையில் நல்ல காரியங்கள் நடப்பது தடைபடுகிறது. வீட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால், அவற்றை அகற்றவும். ஏனெனில் அதிக பிளாஸ்டிக் வீட்டில் எதிர்மறை சக்தியை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

வீட்டின் கடிகாரம் செயலிழந்துவிட்டாலோ அல்லது பழுதடைந்தாலோ அதை மாட்ட வேண்டாம். அதனால் பணி இடங்களில் நிம்மதி கிடைக்காது. வீடு முழுவதும் பழைய செய்தித்தாள்கள் இருந்தால், உடனடியாக அதை அகற்றிவிடுங்கள். ஏனெனில் அதில் குவிந்துள்ள தூசி மற்றும் அழுக்கு பொருளாதார நிலையில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. பழுதடைந்த மின்னணு பொருட்கள், கேபிள்கள், பல்புகள் போன்றவற்றையும் வைத்திருக்கக் கூடாது. சேதமடைந்த மின்னணுப் பொருட்களால் எதிர்மறை ஆற்றல் வீட்டுக்குள் அதிகரிக்கிறது.

நிதி நெருக்கடியால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வீட்டில் மோசமான பூட்டுகள் இருந்தால், அதை வைத்திருக்க வேண்டாம். உடனடியாக அதை மாற்றிவிடுங்கள். முடிந்தவரை வீட்டை சுத்தமாகவும், சமையலறையை சுகாதாரமாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். புகைப்படங்களை துடைத்து வைப்பது, ஜன்னல் கம்பிகளை நன்றாக பராமரிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
 

click me!