அவ்வையின் சிறப்பியல்புகளை சொல்லிகொண்டே இருக்கலாம். தமிழறிவுடன் பிறந்த இவர் சிவபரத்துவம் தெளிந்தவர், கவித்துவம் வாய்க்கப் பெற்றவர். உள்ளம், உண்மை, மொழி ஆகியவற்றில் உயர்ந்த இவர் அறம், பொருள் இன்பம், வீடு என நான்கும் புரிந்தவர் ஆவார். இவருக்கும் தமிழ் கடவுளாம் முருகனுக்கும் நல்ல அன்பு இருந்தது.
அவ்வையின் சிறப்பியல்புகளை சொல்லிகொண்டே இருக்கலாம். தமிழறிவுடன் பிறந்த இவர் சிவபரத்துவம் தெளிந்தவர், கவித்துவம் வாய்க்கப் பெற்றவர். உள்ளம், உண்மை, மொழி ஆகியவற்றில் உயர்ந்த இவர் அறம், பொருள் இன்பம், வீடு என நான்கும் புரிந்தவர் ஆவார். இவருக்கும் தமிழ் கடவுளாம் முருகனுக்கும் நல்ல அன்பு இருந்தது.
அவ்வை மூதாட்டிக்கு ஒரே ஊரில் தொடர்ந்து தங்கி இருக்கும் இயல்பு கிடையாது. பல ஊர்களுக்கு பாத யாத்திரையாகச் சென்று தம் புலமையால் அறக்கருத்துகளைப் பரப்பி கொண்டே வந்தார். ஒருமுறை அவ்வாறு போய்க் கொண்டிருந்தபோது, செல்லும் வழியில் ஒரு காடு இருந்தது. வெயிலில் நடந்து வந்த களைப்பை போக்க அந்தக் காட்டில் இருந்த நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார். அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன், “பாட்டீ…! நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்… நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டான். மேலிருந்து அசரீரீ போல் ஒலிக்கும் குரல் யாருடையது என்று தலையை நிமிர்த்தி அவ்வையார் பார்த்தபோது, ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அவ்வாறு கேட்டது தெரியவந்தது.
அந்தச் சிறுவனை சாதாரணமானவனாக கருதிய அவ்வையார், ‘‘சரி… அப்பா… நாவல் பழங்களைப் பறித்துப் போடு!” என்றார். அவ்வையாரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் அவ்வையின் தமிழ்ப் புலமையோடு விளையாட நினைத்தான். “பாட்டீ…. உங்களுக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டான்.
அவ்வையாருக்கோ ஒன்றும் புரியவில்லை. நாவல் பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று எதுவும் கிடையாதே என்று நினைத்த அவ்வை, இந்தச் சிறுவனிடம், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் விளக்கம் கேட்பது தமது புலமைக்கு இழிவு என்று கருதினார். “சுட்ட பழமாகவே நீ பறித்துப் போடப்பா…” என்று அவ்வை கூறினார்.
மரத்தில் இருந்த சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான். மண்ணில் கிடந்த நாவல் பழங்களை அவ்வையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது. அந்த மண்ணைத் துடைப்பதற்காக அவ்வையார் ‘ஃபூ….. ஃபூ’ என்று ஊதினார்.
அவ்வையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான். “பாட்டி….! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதி ஊதி சாப்பிடுங்கள்!” என்று கூறினான். என்று
கலாய்த்தான்.
அப்போதுதான் அவ்வையாருக்குச் ‘சுட்ட பழம்’ சுடாத பழம் ’ என்பதற்கான அர்த்தம் புரிந்தது. ஆடு மாடு மேய்க்கும் சிறுவன், தன்னை வென்று விட்டானே என்று அவ்வையார் வெட்கப்பட்டார். மனம் வருந்தினார். ஆடு, மாடு மேய்ப்பவனாக வேடம் தாங்கி அங்கே முருகன்,. அவ்வையாரின் மனவருத்தத்தைப் போக்க, தன் உண்மை வடிவுடன் காட்சி அளித்தான். அவ்வைக்கு அருள்பாலித்தான். கர்வம் தணிந்த அவ்வையிடம் முருகன் சில கேள்விகளை கேட்க நீ அறியாதது எதுவும் உண்டா? உன் தந்தைக்கே மந்திரம் சொன்னவன் அப்பா? உனது ஐயத்தை போக்கும் பெருமை என் தமிழுக்கு கிடைக்கட்டும் என்றார் ஒளவையார்.
செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பௌமாஸ்வினி புண்யகாலம்!
அப்போது கொடியது இனியது,பெரியது அரியது என்ற கேள்விக்கு அவ்வையின் பதில் நாம் எப்படி வாழ வேண்டும் என்ற தத்துவத்தை கற்றுத்தந்துவிடும் வகையில் அமைந்துள்ளது. அதிலும் அரியது என்பதில் மானிடராய் பிறத்தல் குறித்து அவ்வை கூறியிருப்பார்.
Siddhas : சித்தர்களின் சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா??
அதில் மனிதனாக பிறந்தவன் ஊனம் இல்லாமல் பிறப்பது அரிது. அதை காட்டிலும் அவன் கல்வி பெற்று இருப்பது அரிது.. அதை விட அரிது பிறருக்கு கொடுக்கும் ஈகையும் நோன்பும் என்று கூறியிருப்பார். அப்படி இருப்பவர்களுக்கு தான். பெருவாழ்வு கிடைக்கும் என்றார். இறைவனது விருப்பமும் அப்படி தான். தூணிலும் துரும்பிலும் என்னை காணலாம் என்று சொல்லும் இறைவனை சிறு எறும்பிலும் காணலாம் என்பதால் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்துங்கள் என்று சொல்லவே இந்த கதை உங்களுக்கு.