மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் கோவிலுக்கு செல்ல கூடாது..காரணம் இதுதான்!

By Dinesh TG  |  First Published Sep 13, 2022, 11:44 AM IST

இறைவனது திருப்பணியில் பெண்கள் தான் எந்த மதமாக இருந்தாலும் அதிக ஈடுபாடு செலுத்துகிறார்கள். வீட்டை தூய்மைப்படுத்துவது முதற்கொண்டு, பூஜை செய்து இறைவனை இல்லத்தில் நிறுத்தி வைப்பதில் மட்டுமின்றி ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளிலும் பெண்களின் பங்கு இன்றியமையாதது. 
 


சிவப்பெருமானின் பாதியான பார்வதி தேவியையும், மகா விஷ்ணுவின் துணையான லஷ்மி தேவியையும், மாகாளியையும், மகமாயி மாரியையும், துர்க்கையையும், சரஸ்வதி போன்ற பெண் தெய்வங்களையும் வழிபடுகிறோம். ஆனால் பெண்கள் மாதந்தோறும் இயற்கையான மாதவிடாய் சுழற்சிக்கு உட்படும் காலகட்டங்களில் தீ ட்டு.. என்று கூறி வீட்டுக்கு விலக்கு என்றும் ஒதுக்கப்படுகிறார்கள். காலங்கள் மாறிவிட்ட நிலையிலும் இத்தகைய தீட்டு காலங்களில் மட்டும் வணங்கும் நாம் பெண்களை இத்தகைய காலங்களில் தெய்வத்திடமிருந்து விலகி வைக்கலாமா?..

பெண் என்பவள் தாய்மை என்னும் அற்புதமான வரம் பெற்றவள். அதனால் தான் சாஸ்திரத்தில் பெண்களை தெய்வத்துக்கு சமமானவர்கள் என ஒப்பிட்டு  சொல்லப்பட்டுள்ளது. இந்து மத மரபுகளின் படி மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தூய்மையற்றவர்களாகவும், அதனால் வீட்டில் உள்ள பூஜையறையி ல் நுழையவோ ஆலயங்களில் நுழையவோ தடை விதிக்கப்படும். பழங்காலத்தில் மாதவிடாய் ஏற்படும் போது பெண்கள் தனி அறையில் வைக்கப்படுவார்கள். தூய்மையான பொருள்களைத் தொடுவதற்கு கூட அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்கு வேதத்தில் ஒரு கதை உண்டு. 

Tap to resize

Latest Videos

இந்திரன் ஒரு பிராமணனை கொன்று பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானான். தேவர்களின் அரசனான இந்திரன் செல்வ செழிப்போடு அழகுற வாழ்பவனுக்கு பிரம்மஹத்தி தோஷத்தால் முகம் கறுத்தது. பார்க்கவே கோரமாக காட்சி அளித்தான். முகத்தில் சங்கட ரேகைகளும், கண்களும் உறுப்புகளும் அழுதன. குற்றங்களிலேயே கொடிய குற்றம் பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷத்தைப் பெற்றவனுக்கு எவ்வித பரிகாரமும் இல்லை. பித்துப் பிடித்து அலைவது தான் இதற்கான தண்டனை.. வேண்டுமானால் தோஷத்தை யாராவது விரும்பி ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் யார் ஏற்றுக்கொள்வார்கள். அப்போது பூமாதேவியைச் சந்தித்த இந்திரன் எனது பிரம்மஹத்தி தோஷத்தை எடுத்துக்கொள்ளேன் என அழுதிருக்கிறார். 

குங்குமம் தடவிய எலுமிச்சையை தலைவாசலில் வைப்பது ஏன்?

தோஷத்தை முழுவதுமாக எடுத்துக்கொண்டால் என் மேல் வசிக்கும் ஜீவராசிகளுக்கு சந்தோஷம் கிடைக்காது. வேண்டுமென்றால் ஒருபகுதியை எடுத்துகொள்கிறேன். ஆனால் பதிலுக்கு நீ ஒரு வரம் தரவேண்டும். பூமி பிளந்தால் மீண்டும் சேரும் வரம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டாள். அப்படி வாங்கிய தோஷத்தால் பாதிக்கப்பட்ட பகுதி தான் பாலை வனமாகவும், தரிசு நிலங்களாகவும் மாறியதாக சொல்வார்கள். 

பின்னர்  மரங்களிடம் சென்று பிரம்மஹத்தி தோஷத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்ற இந்திரன். நாங்கள் வெட்டப்பட்டாலும் மீண்டும் துளிர்க்கும் வரம் கொடு என கேட்டு அவைகள் சிறிது தோஷம் வாங்கிக் கொண்டன. அந்த தோஷம் தான் மரங்களில் கோந்தாக வழிகிறது. இதனால்தான் பிராமணர்கள் சிரார்த்தக் காலங்களில் பெருங்காயத்தைப் பயன்படுத்த மாட்டார்கள். 

கருங்கல்லில் கடவுள் சிலை .. காரணம் என்ன தெரியுமா?

இந்திரனிடம் இன்னும் பாதி பிரம்மஹத்தி தோஷம் இருந்தது. இந்திரன் ஸ்தரிஸம்ஸாதம் என்னும் பெண்கள் மாநா ட்டிற்கு சென்று அங்கிருந்த பெண்களிடம் தன்னுடைய தோஷத்தை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினான். உனக்கு உதவ விரும்புகிறோம் பதிலுக்கு எங்களுக்கு என்ன தருவாய்? என கேட்க.. என்ன வேண்டுமென்றாலும் என இந்திரன் சொல்ல, நாங்கள் பிரசவிக்கும் வரை எங்கள் கணவருடன் தேகசம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டார்கள். அப்படியே ஆகட்டும் என்ற இந்திரன் எஞ்சியிருந்த பிரம்மஹத்தி தோஷத்தை பெண்களிடம் கொடுத்து அவன் பழைய உருவத்தைப் பெற்றான். அந்த தோஷம் தான் பெண்களுக்கு மாதமாதம் மாதவிடாயாக வெளி வருகிறது என்கிறது வேதக்கதை. 

சமஸ்கிருதத்தில் இந்த மூன்று நாட்களை பகிஷ்டை என சொல்வார்கள். அதாவது வெளியில்வை.. விலக்கிவை என பொருள். பிரம்மஹத்தி தோஷத்தை வாங்கிக்கொண்ட பெண்கள் அந்த தோஷத்தால் உருவாகும் அந்த நாட்களில் அவள் தோஷம் பிடித்தவள் அதனால் அவள் விலகியிருக்க வேண்டும் என்று ஒதுக்கி வைத்துள்ளது. இது வேதக்கதை . 

சோர்வுடனும் மன சஞ்சலத்துடனும் தெளிவில்லாத நி லையில் இறைவனை எப்படி வழிபட முடியும் என்பதாலேயே தான் கோயில்களிலும், பூஜை வழிபாடுகளிலும் ஒதுங்கியிருக்க வலியுறுத்தப்பட்டார்கள். நாளடைவில் இந்த ஒதுக்க நிகழ்வே ஒதுக்கி வைக்கப்பட்டதாக மருவி போயிற்று.நம் உடலிலிருந்து வெளியேறும் எதிர்மறை ஆற்றலால் நமக்கு அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படலாம் என்பதை மனதில் கொண்டு தான் பெண்கள் மாதவிலக்கு சமயத்தில் ஒதுக்கி அல்ல.. ஒதுங்கியிருக்க வலியுறுத்தப்பட்டனர். 

இந்தச் சூழ்நிலையில் நீங்கள் நல்லதை நினைத்து நல்லதை மட்டுமே கூட வழிபடலாம். ஆனால் இவற்றை உங்களுக்குள் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த கடவுளை பிடித்த முறையி ல் தொட்டு பூஜை செய்ய முடியவில்லை என்றாலும் மனதால் அவரது நாமத்தை ஜபியுங்கள். இதை யாரும் தடுக்க முடியாது. உடல் ரீதியான நிலைகள் எத்தகைய காலத்திலும் ஆன்மிகத்தை மாசுபடுத்தாது.

click me!