ரூ.7 கோடியை தாண்டிய பழனி முருகனின் உண்டியல் வருவாய்

Published : Feb 23, 2023, 05:39 PM IST
ரூ.7 கோடியை தாண்டிய பழனி முருகனின் உண்டியல் வருவாய்

சுருக்கம்

முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றான பழனியில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவில் உண்டியல் வருவாய் ரூ.7 கோடியை தாண்டியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு  தண்டாயுதபாணி  சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலை மீது சென்று  சுவாமி தரிசனம் செய்யும் போது காணிக்கை செலுத்துவதற்க்கு வசதியாக மலையடிவாரம், பாதவிநாயகர் கோவில் முதல் மலைகோவில் வரை பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 

கோவிலில் அண்மையில் தான் பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்களால் செலுத்திய காணிக்கைகளால் நிறையும் உண்டியல்கள்   திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் உண்டியல்கள் நிறைந்ததை அடுத்து, உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. 

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரொக்கமாக ரூ.7 கோடியே 17லட்சத்து 42 ஆயிரத்து 126 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1 கிலோ 248 கிராமும், வெள்ளி 48 கிலோ ஆயிரத்து 277 கிராமும், வெளிநாட்டு கரன்சி 2529 நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது. 

திண்டுக்கல்லில் நகைக்காக மூதாட்டி கொலை; இருவர் கைது

உண்டியல் எண்ணும் பணி நிறைவுபெற்றதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும்  தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

தமிழர்கள் மீது பாஜக தான் உண்மையான அன்ப கொண்டுள்ளது; தமிழிசை விளக்கம்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chanakya Niti : பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் தந்தையா நீங்க.! மறந்து கூட இந்த 5 தவறுகளை செய்யாதீங்க.! சாணக்கியர் அறிவுரை.!
Akshaya Tritiya 2026 அட்சய திருதியை 2026 அன்று அவசியம் புது பொருள் வாங்கணுமா? சாஸ்திரங்கள் சொல்வது என்ன?