ஆரத்தி எடுத்த பிறகு அந்த தட்டில் கொஞ்சம் பணம் வைக்கும் வழக்கம் உள்ளது. பூஜை ஆரத்தி தட்டில் ஏன் பணம் வைக்க வேண்டும் என்ற இந்து வழிபாட்டு பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையின் காரணம் தெரியுமா?
தமிழர்கள் சுப சடங்குகளில் ஆரத்தி எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தூரத்து பயணம் செய்துவிட்டு வீடு திரும்புபவர்களுக்கு, மணமக்களுக்கு, பிரசவம் முடிந்து வீட்டிற்கு வரும் பெண்களுக்கு என ஆரத்தி எடுப்பதை பார்த்திருப்போம். இதன் நோக்கம், யாருக்கு ஆரத்தி எடுக்கிறோமோ அவர்களுக்கு லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் ஆசியும் அருளும் கிடைக்க வேண்டும் என்பதுதான்.
இந்து மதத்தில் பூஜைக்கு பிறகும் ஆரத்தி செய்யும் பாரம்பரியம் உள்ளது. கோவிலிலும், வீட்டிலும் மணி ஓசை கேட்டால் அங்கே ஆரத்தி செய்யப்படுகிறது என்று அர்த்தம். ஆரத்தி என்ற சொல் சமஸ்கிருத ஆராத்ரிகாவிலிருந்து வந்தது. இதற்கு இருளை அகற்றுவது என்று பொருள். ஆரத்தி தெய்வத்தைச் சுற்றி கடிகாரம் சுழலும் திசையில் செய்யப்படுகிறது.
undefined
ஆரத்திக்குப் பிறகு பூஜையில் இருந்த அனைவருக்கும் ஆரத்தி தட்டு காண்பிக்கப்படும். ஆரத்தி எடுக்கும்போது அனைவரும் கண்டிப்பாக ஆரத்தி தட்டில் கொஞ்சம் பணம் போடுவார்கள். நம் வீட்டு பெரியவர்கள் கூட ஆரத்தியை வெறும் கையால் எடுக்கக் கூடாது என்று சொல்வார்கள். இப்படி ஆரத்தி தட்டில் பணம் வைப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? இதற்கு ஒன்றல்ல மூன்று முக்கிய காரணங்கள், அதை இங்கு காணலாம்.
முதன்மையான காரணம்
பகவத் கீதையில், தானம் செய்வது ஒரு கடமை எனக் கூறப்பட்டுள்ளது. தானம் செய்யத் தகுதியான நாடு, நேரம் பார்த்துத் தகுதியானவனுக்குக் கொடுக்க வேண்டும். வெகுமதியை எதிர்பார்க்காத தொண்டு சாத்வீகமாக கருதப்படுகிறது. இந்து மதத்தில் தொண்டு செய்யும் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் தர்மம் எப்போதும் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பூசாரிகள் கோவிலில் தங்கள் நேரத்தை செலவிட்டு, கடவுள் பக்தி, ஆன்மிக சேவையில் மூழ்கியுள்ளனர். அதனால்தான் பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும்போது அர்ச்சகருக்கு ஆரத்தித் தட்டில் பணத்தைப் போடுவார்கள்.
இதையும் படிங்க: மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு.. எப்போது? எப்படி விரதம் இருந்தால் அம்மன் அருளை முழுமையாக பெறலாம்..
இரண்டாவது காரணம்
ஆரத்தி தட்டில் பணம் வைப்பதற்கு மற்றொரு காரணம், அர்ச்சகர் வழிபாட்டைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. அதனால் அவர்களுக்கு நிலையான வருமானம் இல்லை. அவரும் அவரது குடும்பத்தினரும் கோயில் அல்லது மக்கள் வழங்கும் நன்கொடைகளை நம்பியே இருக்கிறார்கள். அதனால்தான், பழங்காலத்தில் கோயிலில் உள்ள ஆரத்தித் தட்டில் நன்கொடையாகப் பணத்தை வைத்து, அர்ச்சகரும் அவரது குடும்பத்தினரும் பராமரிக்கப்படவும், கோயில் அமைப்பு நன்றாக இருக்கவும் ஒரு பாரம்பரியம் இருந்தது. இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.
மூன்றாவது காரணம்
ஆரத்தித் தட்டில் பணம் வைக்கும் பாரம்பரியம், பசுவுக்கு சேவை செய்வதற்காக அளிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. இதன்படி ஆரத்தி தட்டில் சேகரிக்கப்படும் பணத்தை பசுவின் நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என இந்து சாஸ்திரங்கள் நமக்கு சொல்கின்றன.
ஆரத்தி எடுக்கும்போது கிருமிகள் அழியுமா?
மஞ்சள், சுண்ணாம்புக்கு கிருமிகளை ஒழிக்கும் ஆற்றல் உண்டு. இவை நம் உடம்பில் உள்ள விஷ அணுக்களை அழிக்கும் என நம்பப்படுகிறது. பொதுவாக ஆரத்தியை சுற்றிய பிறகு அந்த நீரை வடக்கு பக்கமாகக் கொட்டவேண்டும் என்பார்கள். இந்த நீர் எவர் காலிலும் படாதபடி ஏதேனும் செடி மீது ஊற்றுவது இன்னும் சிறப்பு என்பார்கள் பெரியோர். அதனால் தான் வெளி இடங்களில், மருத்துவமனைகளில் இருந்து வருவோரை வாசலில் நிறுத்தி ஆரத்தி எடுத்து அழைத்து செல்வார்கள்.
இதையும் படிங்க: கடைசியாக சென்ற சிவன் கோயில் கருவறையில் மயில்சாமியின் உருவப்படம்.. கருவறையில் வைக்க என்ன காரணம்?