இஸ்கான் நடத்தும் ராம நவமி விழா! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இஸ்கான் நடத்தும் ராம நவமி விழாவை 6 ஏப்ரல் 2025 ஞாயிறு அன்று வெகு சிறப்பாக கொண்டாடவுள்ளது. இது குறித்து முழு விவரம் உள்ளே..

ram navami 2025 date time and celebrations in iskcon temple chennai in tamil mks

Ram Navami 2025 Celebrations In Iskcon Temple Chennai : ஸ்ரீ ராம நவமி என்பது இஸ்கானில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். அதாவது இது இறைவன் ஸ்ரீ ராமச்சந்திரரின் புனித அவதார தினமாகும். தர்மத்தின் சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய ராமர், நீதியும், கருணையும், பக்தியுமாக வாழ்ந்து, உலகிற்கு ஒரு ஒப்புமையற்ற அரசராக இருந்தார். அவரது மகத்தான வாழ்க்கை கோடிக்கணக்கான பக்தர்களுக்கு நிரந்தரமாக ஒரு தூண்டுதலாக உள்ளது.

ராம நவமி நாளில் பக்தர்கள் நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து, ஸ்ரீ ராமரை நினைவு கூர்ந்து, அவரது புனித நாமங்களை உச்சரிப்பதும், ராமாயணத்தை கேட்பதும் மூலமாக அவரை வணங்குகிறார்கள். பின் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு விரதத்தை முடிக்கிறார்கள்.

Latest Videos

இதையும் படிங்க:  மார்ச் 29ஆம் தேதி சனி பெயர்ச்சி இல்லையா.? திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர கோயில் முக்கிய அறிவிப்பு

ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பல ராமரின் தெய்வங்கள் ராமர் மற்றும் லட்சுமணராக அலங்கரிக்கப்படுவர். இந்த சிறப்பு அலங்காரம் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். பிருந்தாவனத்தில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் ஆன ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணர் பலராமர் அரசவாஸ்திரங்களை ஏற்று கைகளில் வேல் மற்றும் அம்புகளை ஏந்தியபடி அயோத்தியின் இளவரசர்களாக தோன்றுகிறார்கள். 

மாலையில் ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ண சந்தித்தரின் உற்சவ தெய்வங்கள் சீதாராமராக அலங்கரிக்கப்பட்டு கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவார். பக்தர்கள் ராமரின் மகிமையை பாடி அவரது நாமங்களை உச்சரிப்பர். ஊர்வலத்திற்கு பிறகு பக்தர்கள் ஸ்ரீ ராம அஷ்டோத்திர சத நாமத்தை உச்சரித்து ராம தரக ஹோமத்தை செய்வார்கள். ஹோமத்திற்கு பிறகு சிறப்பு சயனை ஆர்த்தி செய்யப்படும். பிறகு பல்லகி உற்சவம் நடைபெறும்.

இதையும் படிங்க:  2025ல் முதல் சனி அமாவாசை: 5 ராசிகளில் பெரிய மாற்றம், உங்களை தேடி வரும் அதிர்ஷ்டம்!

2025 இஸ்கான் ராம நவமி விழா எப்போது?

இந்த 2025 ஆம் ஆண்டு இஸ்கான் நடத்தும், ராம நவமி விழாவானது சென்னை அரும்பாக்கம் கோலா பெருமாள் செட்டி வைஷ்ணவ மூத்த நிலை பள்ளியில் ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. மாலை 5:30 மணிக்கு தொடங்கி 7:30 மணிக்கு நிறைவு பெறும். இந்நிகழ்ச்சியில், ஆன்மீகத் திருப்தியூட்டும் பஜன் & கீர்த்தனம், இசை நாடகம், ஆன்மீக உரை, ராம கதா ஆகியவை இடம்பெறும். விழா பிரசாதம் வழங்குதலுடன் நிறைவு பெறும்.

நிகழ்ச்சி நிரல்:

5:30 PM - பஜன் & கீர்த்தனம்
6:00 PM - பக்திப் பரவசமான நாடகம்
6:15 PM - HH பானு ஸ்வாமி மஹாராஜ் வழங்கும் ஆன்மீக உரை
6:30 PM - ராம கதா
7:00 PM - அரத்தி & புஷ்பாஞ்ஜலி
7:30 PM - பிரசாதம்

இஸ்கான் சென்னை அண்ணாநகர் திருவிழாவில் பங்கேற்று, பகவான் ராமரின் அருளைப் பெறுங்கள்!!

vuukle one pixel image
click me!