வாஸ்து சாஸ்திரத்தின் படி மனைவியின் சில பழக்கவழக்கங்கள் வீட்டில் நிதி பிரச்சினையை ஏற்படுத்திவிடும். அது என்னென்ன என்று இது பதிவில் காணலாம்.
Vastu Tips For Money : நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக நிதி பிரச்சனைகளை சந்தித்திருப்போம். காரணம் ஏதும் தெரியாமல் குழப்பத்தில் இருப்போம். இதற்கு முக்கிய காரணம் பல சமயங்களில் நம் வீட்டில் செய்யும் சில தவறுகளால் தான் ஏற்படுகிறது தெரியுமா? ஆம், வாஸ்து சாஸ்திரத்தின்படி, மனைவி செய்யும் சில பழக்கவழக்கங்களால் வீட்டில் எதிர்மறை சக்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல் செல்வ இழப்பு ஏற்படும். இன்னும் சொல்லப்போனால் மனைவி வீட்டில் செய்யும் சில தவறுகளால் கணவனின் பாக்கெட் காலியாகி விடும். அது என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.
மனைவி வீட்டில் செய்யும் சில தவறுகள் இங்கே:
1. உப்பை இதில் வைக்காதே
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பிளாஸ்டிக் டப்பாவில் உப்பு வைத்திருப்பது நல்லதாக கருதப்படவில்லை. இதனால் வீட்டில் நிதி பிரச்சனை ஏற்படும். எனவே, நேர்மறை ஆற்றல் வீட்டில் நிலைத்திருக்க அதை எப்போதும் கண்ணாடி அல்லது ஜாடியில் வைக்கவும்.
2. கடவுளுக்கு உணவு படிக்கும் முன் இந்த தவறை செய்யாதே
கடவுள்களுக்கு உணவு படைப்பதற்கும் முன் அதை ஒருபோதும் ருசித்துப் பார்க்கக் கூடாது. இதனால் வாஸ்து தோஷம் உருவாகும் என்று வாசசாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. மேலும் இதனால் வீட்டில் பணம் இழப்பு ஏற்படும்.
3. பூண்டு வெங்காயத் தோல்களை எரிக்காதே
பூண்டு மற்றும் வெங்காய தோள்களை எரித்தால் வீட்டில் எதிர்மறை சக்தி அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் மற்றும் வீட்டில் அமைதியின்மை ஏற்படும்.
இதையும் படிங்க: வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? அப்ப 'இந்த' தப்ப மறந்தும் பண்ணாதீங்க!!
4. மாலையில் விளக்கை ஏற்றாதே
வாஸ்துபடி, மாலை வேளையில் வீட்டில் அதுவும் குறிப்பாக பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது நல்லதல்ல. இதனால் வீட்டிற்குள் வருமை வரும். எனவே பூஜையறையில் விளக்கேற்ற சரியான நேரம் சூரிய உதயத்திற்கும் முன் ஆகும்.
5. சிங்கில் பாத்திரங்களை போடாதே
இரவு சாப்பிட்டுவிட்டு சிங்கிள் அழுக்கான பாத்திரங்களை அப்படி போட்டிருந்தால் வீட்டில் பண இழப்பை ஏற்படுத்தும். முக்கியமாக வீட்டில் லட்சுமி தேவி வசிக்க மாட்டாள். இதனால் மேலும் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க.
இதையும் படிங்க: வீட்டில் இந்த திசையில் மஞ்சள் நிற பொருட்களை வைத்தால் பணத்திற்கு பஞ்சமே வராதாம்!
6. பால் தயிரை திரண்டு வைக்காதே
வாஸ்து சாஸ்திரத்தின் படி பால் மற்றும் தயிரை இரவு நேரத்தில் திறந்து வைப்பது, வீட்டில் எதிர்மறை சக்தி அதிகரிக்கும் மற்றும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
7. துளசி செடியை இந்த திசையில் வைக்காதே
துளசி இந்து மதத்தில் மங்களகரமான செடியாக கருதப்படுகிறது. இதை வீட்டில் வைத்திருந்தால் மகிழ்ச்சி செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். ஆனால் வாசப்படி துளசி செடியை ஒருபோதும் தெற்கு திசையில் வைக்கக்கூடாது. மீறினால் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
8. விளக்கை ஊதி அணைக்காதே
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் விளக்கை ஏற்றிய பிறகு அதை ஒருபோதும் ஊதி அணைக்க கூடாது. இதனால் வீட்டில் நிதி நிலைமை அதிகரிக்கும். அதை அணைக்க வேண்டும். ஆனால் ஏதாவது ஒரு பொருளை கொண்டு தான் அணைக்க வேண்டும்.
9. பிரதான கதவை காலால் திறக்காதே
பிரதான கதவு வழியாக தான் வீட்டிற்குள் நேர்மை ஆற்றல் நுழையும் என்று வாசசாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. எனவே பிரதான கதவை ஒருபோதும் கால்களால் திறக்காதீர்கள். அது அசுபமாக கருதப்படுகிறது. இதனால் செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி தேவி உங்கள் மீது கோபப்படுவாள்.
10. மீந்த மாவில் ரொட்டி சுடாதே
வாஸ்துபடி இரவில் பிசைந்த மாவில் மறுநாள் காலை ரொட்டி சுடுவது நல்லதாக கருதப்படவில்லை. இதனால் பண இழப்பு தான் ஏற்படும். எனவே காலையில் ரொட்டி சுட வேண்டுமானால் புதிய மாவு பிசைந்து சுடுங்கள்.