உலகின் அற்புதமான புகழ்பெற்ற ஒரு கோயிலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.. அது குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள கோலியாக் கிராமத்தில் அமைந்துள்ள நிஷ்கலங்க் மகாதேவ் கோயில் தான்.
நம் நாட்டில் பல வித்தியாசமான, அதிசயமான கோயில்கள் உள்ளன. அந்த வகையில் உலகின் அற்புதமான புகழ்பெற்ற ஒரு கோயிலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.. அது குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள கோலியாக் கிராமத்தில் அமைந்துள்ள நிஷ்கலங்க் மகாதேவ் கோயில் தான். கடற்கரையில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் அரபிக்கடலுக்கு உள்ளே இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவர் நிஷ்கலங்க் மகாதேவ் என்ற பெயரில் அறியப்படும் சிவன்.
மலைகள், குன்றுகள் குகைகளுக்குள், கடலோரம், நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் கட்டப்பட்ட கோயில் என வித்தியாசமான இடங்களில் கட்டப்பட்ட பல இந்துக் கோயில்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லது பார்த்திருப்போம். ஆனால் இந்த நிஷ்கலங்க் மகாதேவ் கோயில் தனித்துவமானது. அது கடலுக்கு அடியில் கட்டப்பட்டுள்ளது!! இக்கோயில் கடலில் புதைந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த கோவில் பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும் இந்த கோவிலின் வரலாறு மஹாபாரத சகாப்தத்திற்கு முந்தையது என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் கௌரவர்கள் அனைவரையும் கொன்று போரில் வெற்றி பெற்றனர். ஆனால் பாண்டவர்கள் தங்கள் சொந்த உறவினர்களைக் கொன்றதால் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் கவலையடைந்த பாண்டவர்கள் கிருஷ்ணரை சந்தித்து தங்கள் பாவங்களை போக்க வழி கேட்டனர்.
அப்போது கிருஷ்ணர் அவர்களுக்கு ஒரு கருப்பு கொடியையும் ஒரு கறுப்பு பசுவையும் கொடுத்து, பாண்டவர்களைப் பின்பற்றும்படி கூறினார். கொடியும் பசுவும் வெள்ளையாக மாறும் தருணத்தில் அவர்கள் மன்னிக்கப்படுவார்கள் என்றார். மன்னிப்பு பெற்ற பிறகு சிவபெருமானை நினைத்து தவம் செய்யும்படியும் கிருஷ்ணர் அறிவுறுத்தினார். பின்னர் பாண்டவ சகோதரர்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் அந்த கொடியையும், பசுவை அழைத்து சென்றனர். பல நாட்கள் மற்றும் மாதங்கள், வெவ்வேறு இடங்களுக்கு நடந்து சென்றார்கள். ஆனால் அந்த பசு மற்றும் கொடியின் நிறம் மாறவில்லை. இறுதியாக, கோலியாக் கடற்கரைக்கு வந்தபோது, மாடு மற்றும் கொடி இரண்டும் வெள்ளை நிறத்தில் மாறியது.
பாண்டவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்., மேலும் 5 சகோதரர்களும் ஆழ்ந்த தவம் செய்து சிவபெருமானை நினைத்து தியானம் செய்தனர். அவர்களின் தவத்தால் மனம் குளிர்ந்த சிவபெருமான், சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் சிவலிங்கம் வடிவில் காட்சியளிக்க முடிவு செய்தார். எனவே, அவர்கள் தியானம் செய்யும்போது, ஒவ்வொரு சகோதரன் முன் ஒவ்வொரு லிங்கம் தோன்றியது. எனவே, இந்த கோவிலில் 5 சுயம்பு லிங்கங்கள் உருவானது. இதைக் கண்டு மகிழ்ந்த பாண்டவர்கள் ஐந்து லிங்கங்களையும் மிகுந்த பக்தியுடன் வழிபட்டனர்.
இந்த கோயிலின் முக்கிய கடவுள் சிவபெருமான் நிஷ்கலங்க் மகாதேவ் என்று அழைக்கப்படுகிறார். நிஷ்கலங்க் என்றால், சுத்தமான, தூய்மையான, குற்றமற்ற, பரிசுத்தமான என்று பொருள். பாண்டவர்கள் பாத்ரபதா (தமிழில் ஆவணி) அமாவாசை நாளில் நிஷ்கலங்க் மகாதேவை நிறுவியதாகக் கூறப்படுகிறது. எனவே, 'பத்ராவி' என்று பிரபலமாக அறியப்படும் புகழ்பெற்ற திருவிழா ஷ்ராவண மாதத்தில் (ஆகஸ்ட்) அமாவாசை தினத்தன்று நடத்தப்படுகிறது.
அனைத்து 5 சிவலிங்கங்களும் ஒரு சதுர மேடையில் உள்ளன. மேலும் ஒவ்வொரு லிங்கத்திற்கும் ஒரு நந்தி உள்ளது. பாண்டவர்கள் குளம் என்று அழைக்கப்படும் ஒரு குளம் உள்ளது. இது சிவலிங்கத்தின் சன்னதிகளை தரிசிக்கும் முன் பக்தர்கள் முதலில் அதில் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவுகிறார்கள்.
பிரதான கோயில் தண்ணீரால் சூழப்பட்ட ஒரு சிறிய நிலத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்லும் பாதை நள்ளிரவு முதல் மதியம் வரை தண்ணீரில் மூழ்கி இருக்கும். இந்த நேரத்தில், கோயிலின் 20 அடி தூண் மற்றும் அதன் கொடி மட்டுமே தெரியும். ஆனால் மதிய நேரத்தில் கோயிலுக்கு செல்ல வழி கிடைக்கும். எனவே பக்தர்கள் தரிசன நேரம் மதியம் 1:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. அப்போது, பக்தர்கள் நடந்தே இக்கோயிலை அடைகின்றனர். மீண்டும் இரவு 10 மணிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்து கோயில் கடல் நீரில் மூழ்கும். அடுத்த நாள் மதியம் மீண்டும் தோன்றும்.
இந்த கோயிலில் அமாவாசை சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அலைகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், எனவே அலைகளின் வேகம் குறையும் வகை பக்தர்கள் காத்திருப்பார்கள். மேலும் தங்கள் முன்னோர்களின் சாம்பலை இந்த நீரில் கரைப்பதன் மூலம் முக்தி அல்லது மோட்சத்தை அடைவார்கள் என்று பலமாக நம்பப்படுகிறது. இது தவிர, இக்கோயிலின் இறைவனுக்கு பால், தயிர், முழு தேங்காய் பிரசாதம் வழங்கப்படுகிறது..
ஏழு ஜென்மப் பாவங்களையும் போக்கும் ஒரே இடம் "பாபநாசம்" .. மிஸ் பண்ணிடாதீங்க! கண்டிப்பா படிங்க..!!
இந்த கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். இந்தக் கொடி 364 நாட்களும் ஏற்றப்பட்டு, அடுத்த கோயில் திருவிழாவின் போது மட்டும் மாற்றப்படும். இந்த கோயில் கொடி ஒருபோதும் அலைகளால் மூழ்கடிக்கப்பட்டதும் இல்லை அல்லது அடித்து செல்லப்பட்டதுமில்லை. இந்த கோயில் கொடி கடுமையான அலைகளால் பாதிக்கப்படாமல் நிற்கிறது. மேலும் குஜராத்தில் 2001 இல் 50,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற மிக மோசமான நிலநடுக்கத்தால் கூட இந்த கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை..
கடலின் நடுவே கடல் அலைகள் அதிகமாக இருக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ளதால் இது உண்மையிலேயே அதிசயமான கோயிலாகும். ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய கடலில் எப்படி வழி ஏற்படுகிறது என்பது இன்னும் பெரிய மர்மமாக உள்ளது. இந்தக் கோவிலுக்குச் செல்ல எல்லா நாட்களும் உகந்ததாக இருந்தாலும், மார்ச் முதல் ஜூலை வரையிலான காலமே சிறந்ததாக இருக்கும். மழைக்காலத்தில் இந்த கோயிலுக்கு செல்லமுடியாது.