அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலையில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணத்தின் காரணமாக திருமலை கோயில் அக்டோபர் 28 ஆம் தேதி இரவு மூடப்பட்டு அக்டோபர் 29 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
மிகவும் புகழ்பெற்ற கோவில் திருப்பதி. இதை பணக்காரர் கோவில் என்று கூட சொல்லலாம்.மேலும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது உண்டு. இந்நிலையில் இந்த கோவில் அக்டோபர் 28ஆம் தேதி இரவு மூடப்பட்டு அக்டோபர் 29ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். ஏனெனில் அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 2:22 மணி வரை பகுதி சந்திர கிரகணம் காணப்படும். எனவே அக்டோபர் 28ஆம் தேதி இரவு 7:05 மணிக்கு கோயில் கதவுகள் மூடப்படும்.
ஏகாந்தத்தில் சுத்தி, சுப்ரபாத சேவை முடிந்து அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை 3:15 மணிக்கு கோயில் கதவு திறக்கப்படும். சந்திர கிரகணம் காரணமாக கோயில் கதவுகள் எட்டு மணி நேரம் மூடப்பட்டிருக்கும்.
undefined
இதையும் படிங்க: திருப்பதி ஏழுமலையானை நிதானமாக தரிசிக்கலாம்.. அதுவும் வெகு அருகிலேயே..! பலருக்கும் தெரியாத ரகசியம்..
சஹஸ்ர தீபாலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் அக்டோபர் 28 அன்று ரத்து செய்யப்படுகிறது. எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் யாத்திரையை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D