ஏழு ஜென்மப் பாவங்களையும் போக்கும் ஒரே இடம் "பாபநாசம்" .. மிஸ் பண்ணிடாதீங்க! கண்டிப்பா படிங்க..!!

By Kalai Selvi  |  First Published Oct 3, 2023, 7:29 PM IST

பாபநாசம் திருக்கோயில் ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்த ஆலயமாகும். இங்கு வந்து பாபநாசநாதரை வழிப்பட்டால் உங்கள் ஏழு ஜென்மப் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது பாபநாசம் திருக்கோயில். இந்த கோவிலில் தான் சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் திருமணம் நடந்தத்காக கூறப்படுகிறது. மேலும் இவர்களை அனைத்து தேவர்களும் வந்து வாழ்த்து சொல்லியதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அகஸ்தியர் முனிவரை சிவன் பூமியை சமப்படுத்துவதற்காக பொதிகை மலைக்கு அனுப்பினார். ஆனால் சிவன் மற்றும் பார்வதியின் திருமண காட்சியை தரிசிக்க முடியவில்லை என்று அகஸ்தியர் வருந்தியதால், சித்திரை மாத பிறப்பன்று சிவன் அவருக்கு தனது திருமண கோலத்தை காட்சியளித்தார் அது போல் பாபநாச கோயில் கருவறைக்கு பின் கல்யாணசுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது சிவன் திருக்கோலத்தில் அமர்ந்திருக்கும் சிலை உள்ளது. அதற்கு பக்கத்திலேயே அகத்தியரும் அவர் மனைவியும் சிவனை வணங்கியபடி ஒரு சிலை இருக்கும்.

இந்திரன் தோஷம் நீக்கிய பாபநாசநாதர்:
இந்திரன் அசுர குருவான சுக்கிராச்சாரியாரின் மகன் துவஷ்டாவை குருவாக ஏற்றார். ஒருநாள் துவஷ்டா, அசுரர்களின் நலனுக்காக யாகம் நடத்தியதால், இந்திரன் துவஷ்டாவைக் கொன்றான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி என்ற தோஷம் பிடித்தது. மேலும் இந்திரன் பூலோகத்தில் இரும்கும் பல தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு விமோசனம் தேடியும் பலனில்லை. அச்சமயத்தில் தான் வியாழ பகவான் இந்திரனிடம், ’’பாபநாசம் திருஸ்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால் தோஷம் நீங்கும்’’ என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே அவனது பாவம் நீங்கியதாக ஸ்தல புராணம் கூறுகிறது. அஞ்சிலிருந்து இன்று வரை இங்கிருக்கும் சிவன் "பாபநாசநாதர்" என்று அழைக்கப்படுகிறார் என்றது புராணம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  திருப்பதி கோவில் கதவுகள் 8 மணிநேரம் மூடியிருக்கும்..எப்போது தெரியுமா?

சூரிய கைலாயம்:
அதுபோல் அகத்தியரின் சீடரான ரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்கப் பிரதிஷ்டை செய்ய, அதற்கான இடங்களை தனக்கு தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டான். அதற்கு அவர், சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசு, அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்கப் பிரதிஷ்டை செய் என்றார். அவர் சொன்னபடியே ரோமச முனிவர் செய்தார். அவர் வீசிய 9 பூக்கள் 9 இடங்களில் இடங்களில் ஒதுங்கியது. பின் பூக்கள் ஒதுங்கிய அந்த இடத்திலேயே சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். இவை நவ கயிலாயத் திருத்தலங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டதாக புராணம் சொல்கிறது. அந்தவகையில், அவற்றின் முதல் தலம் பாபநாசம் ஆகும். இது சூரியனுக்குரிய கிரகம் ஆகும். ஆகையால் இது சூரிய தலம் மற்றும் சூரிய கைலாயம் என்று பெயர்பெற்றது பாபநாசம் திருத்தலம்.

இதையும் படிங்க: 200-க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில் ஜீவசமாதியான கோயில்.. எங்குள்ளது தெரியுமா?

முக்கிளா லிங்கம்:
அதுபோல் இந்த ஸ்தத்திற்கு முக்கிளா லிங்கம் என்ற பெயர் உண்டு. ஏனெனில், கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிராகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருப்பதால் தான். மேலும் ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தது மற்றும் அதர்வண வேதம் ஆகாயமாக மாறி இவரை வழிபட்டது. எனவே தான் சிவனுக்கு இந்தப் பெயர் வந்தது.

நந்திக்கு சந்தனக்காப்பு:
பொதிகை மலையில் இருந்து வரும் தாமிரபரணி தண்ணீர் இந்தக் கோயிலுக்கு அருகேதான் சமநிலையடைகிறது. அதுபோல் இங்கு தினமும் உச்சிக்கால பூஜையின்போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. மேலும் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்ததாகக் கூறப்படுகிறது. ஆகையால் தான் ஒவ்வொரு தைப்பூசம் அன்று இங்கு இருக்கும் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

அம்பாள் உலகம்மை சந்நிதி:
அதுபோல் இங்கு இருக்கும் அம்பாள் உலகம்மை சந்நிதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரலி மஞ்சளை இட்டு அதனை இடிப்பார்கள். மேலும் இந்த மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்வர். பின் அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை கொஞ்சம் அருந்தினால், திருமண பாக்கியம், சுமங்கலி வரம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்ககும் என்பது ஐதீகம். அதுபோல் ஒவ்வொரு தை அமாவாசை முதல் நாள் அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோருக்கு திதி கொடுத்து தர்ப்பண செய்வார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நடராஜ பெருமான் சந்நிதி:
இந்த தலத்தில் ராஜகோபுரத்தை அடுத்து ஆனந்ததாண்டவ கோலத்தில் நடராஜ பெருமான் தனிச்சந்நிதியில் இருக்கிறார். இவர், ’புனுகு சபாபதி’ என அழைக்கப்படுகிறார். இங்கு கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் ஏதாவது இருந்தால் அவற்றிற்கான சடங்கும் இங்கு நடைபெறும்.

பாவம் நீங்க:
இங்கு இருக்கும் பாபநாச நாதர் மற்றும்  அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினால் உங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என ஸ்தல புராணம் கூறுகிறது. ஆகையால் உங்கள் வாழ்வின் ஒருமுறையாவது பாபநாசம் திருத்தலத்துக்கு சென்று தாமிரபரணியில் நீராடி, பாபநாசநாதரை வழிபட்டுப் பிரார்த்தித்தால், உங்கள் ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கும் மற்றும் உங்களை பிடித்திருக்கும் கர்மவினைகள் அனைத்தும் விலகும்.

click me!