திருப்பதி விஐபி தரிசன முறையில் அதிரடி மாற்றம்.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

By Ramya sFirst Published May 24, 2023, 11:07 AM IST
Highlights

பொது பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்க திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் புதிய மாற்றங்களை செய்துள்ளது.

ஆந்திராவில் உலக பிரசித்த பெற்ற திருப்பதி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகிய முறைகளில் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய தேவஸ்தான நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. அந்த வகையில் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன் மூலம் தினசரி 20,000 டிக்கெட் வீதம் ஆன்லைனில் முன்கூட்டியே வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தரிசன டிக்கெட் மூலம் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : இனி வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது.. வெளியான புதிய உத்தரவு

இந்நிலையில் பொது பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்க திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்புதிய மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி விஐபி தரிசன இடைவேளை மற்றும் ஆர்ஜித சேவை தொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. தற்போது விஐபி டோக்கன் இல்லாத பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு 30 முதல் 40 மணி நேரம் வரை ஆகலாம். எனவே பொது பக்தர்களின் பிரச்சினையைத் தீர்க்க, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுப்ரபாத சேவைக்காக வழங்கப்பட்ட விருப்ப ஒதுக்கீட்டைத் திரும்பப் பெற திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதன் மூலம் 20 நிமிடங்களை மிச்சப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் திருப்பாவாடை சேவை பக்தர்களின்றி நடைபெறுவதால் 30 நிமிடங்கள் மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சுப்பா ரெட்டி இதுகுறித்து பேசிய போது “ வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது, இதனால் மூன்று மணி நேரம் மிச்சமாகும் என்று தெரிவித்தார்.

விஐபி பிரேக் தரிசனம் தனியாக வரும் விஐபிக்களுக்கு மட்டுமே தினமும் மூன்று மணி நேரம் வழங்கப்படும். இந்த மாற்றங்கள் ஜூன் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். பொதுவான பக்தர்களுக்கான தரிசன நேரத்தை குறைக்க திருப்பதி தேவஸ்தான எடுத்த புதிய மாற்றங்களுக்கு பக்தர்கள் மற்றும் விஐபிக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : Gold Alert : இதை செய்யாமல் ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை விற்கவோ, மாற்றவோ முடியாது..

click me!