வீட்டில் கங்கை நீரை வைத்தால் மங்களகரமானது!! ஆனா கங்கா தேவி சிலையை வைக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

By Ma riya  |  First Published May 23, 2023, 4:54 PM IST

இந்து சாஸ்திரங்களின்படி, கங்கை நீரை வீட்டில் வைப்பது மங்களகரமானது என கருதப்படுகிறது. ஆனால் கங்கா தேவி சிலையை வைக்க கூடாது. ஏன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். 


எல்லா பாவங்களுக்கும் விமோட்சனம் கொடுக்கும் ஆற்றல் கங்கை நதிக்கு உள்ளது என்பது ஐதீகம். அதனால் தான் புண்ணிய நதியான கங்கையில் நீராட மக்கள் படையெடுக்கின்றனர். கங்கை நீரை வீட்டில் வைப்பது விசேஷமாக கருதப்படுகிறது. 

கங்கை நீர் இந்து மதத்தில் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. ஆகவே அதை வீட்டில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்து மதத்தில் கங்கை தேவி மிகவும் புனிதமானவர். அதனால்தான் கங்கையில் நீராடுவது முதல் கங்கை நீரை வீட்டில் வைத்திருப்பது வரை புண்ணியம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் கங்கா தேவியின் சிலையை வீட்டில் வைத்திருப்பதை இந்து மதம் தடை செய்துள்ளது.

Latest Videos

undefined

புனித நூல்களின்படி கங்கை ஒரு நதி. நதியின் இயல்பு ஓடுவதுதான் என்பதால், கங்கா தேவி சிலையை வீட்டில் வைப்பது நல்லதல்ல. கங்காதேவியின் சிலையை வீட்டில் வைப்பது எல்லா வளங்களையும் நிலையற்றதாக மாற்றுகிறது. மீறி வைத்தால் அந்த வீட்டில் செல்வம், அமைதி, மகிழ்ச்சி போன்ற எதுவும் நீண்ட காலம் நீடிக்காது. ஓடும் நதியை வீட்டில் அடைப்பது போன்றது கங்கா தேவி சிலையை வீட்டில் வைப்பது. இதனால் அசுபமான விளைவுகள் ஏற்படும். 

இதையும் படிங்க: வழியில் கிடக்கும் பணத்தை எடுப்பது நல்லதா? கெட்டதா?

கங்காதேவியின் சிலை அளவில் பெரியதாக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். ஏனென்றால் ஓடும் நதியின் அளவு பெரியது. நதியின் பெயராலான கங்காதேவியின் சிலையும் பெரிதாக இருப்பதே நல்லது என சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால் அளவில் பெரிய சிலையை வீட்டில் வைக்க முடியாது.

சாஸ்திரங்களில் கூட, வீட்டில் 6 அங்குலத்திற்கும் அதிக உயரமான தெய்வீக சிலை வைப்பது தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆகவேதான் கங்கை நீர் புனிதமாகவும் கங்காதேவியின் சிலை வீட்டில் வைப்பது அசுபமானதாகவும் கருதப்படுகிறது. 

இதையும் படிங்க: சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்!! எல்லாமே சாதகமாக முடியும்!!

click me!