கனவுவில் பாம்பு வருதா? செல்வம் கொட்ட போகுது! சிவராத்திரிக்கு முன்பு வரும் கனவுக்கும் சிவனுக்கும் தொடர்பு உண்டு

By Ma Riya  |  First Published Feb 4, 2023, 1:03 PM IST

மகா சிவராத்திரி தினத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ சில கனவுகளை காண்பது சிவனருள் கிடைக்கும் என்பதன் அறிகுறியாகும்.  


நம்முடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதன் குறிப்புகளை சில விஷயங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதை அடையாளம் காணும் அளவுக்கு நாம் புத்திசாலியாக இருக்க வேண்டும். அப்படி மகா சிவராத்திரியின் போது சிவன் நமக்கு தெரியப்படுத்தும் விஷயங்களை புரிந்து கொள்வது அவசியம். நமது கனவுகளின் வாயிலாக சிவபெருமான் நம்மிடம் சில விஷயங்களை தெரியப்படுத்துவார். 

இந்து நாட்காட்டியின் படி, மாசி மாதம் கிருஷ்ண பக்ஷத்தின் சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படும். 2023ஆம் ஆண்டில் மகாசிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதி சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் அவர் மனம் குளிர்ந்துவிடுவார். விரதம் இருந்து வழிபடுவது, இரவெல்லாம் விழித்து பிரார்த்தனை செய்வது, சிவநாம தியானம் ஆகியவை சிவனருளை கிடைக்க செய்யும். 

Tap to resize

Latest Videos

மகா சிவராத்திரிக்கு முன்பு வரும் சில கனவுகள் நல்ல நிகழ்வுகளின் அறிகுறியாகும். இந்தக் கனவை நீங்கள் கண்டால், சிவபெருமானின் ஆசி உங்களுக்கு இருக்கிறது என பொருள். எந்த கனவுகள் மகிழ்ச்சியை தரும் என்பதை இங்கு காணலாம். 

சிவலிங்க அபிஷேகம் 

மகாசிவராத்திரிக்கு முன்பாக ஒருவர் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்வதை கனவாக கண்டால், அந்த நபரின் மீது சிவபெருமான் மகிழ்ச்சியடைந்துள்ளார் என நம்பப்படுகிறது. அவரது அனைத்து கஷ்டங்களிலிருந்தும் விரைவில் விடுபடுவார் என்றும் அர்த்தம். இந்த கனவு அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் வரப் போவதைக் குறிக்கிறது. 

வில்வ இலை

சிவராத்திரிக்கு முன் வில்வ மரம், இலைகளை கனவில் காண்பது நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட கனவை நீங்கள் கண்டால், கூடிய விரைவில் எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு வரும். நிதி சிக்கல்களை சமாளிக்கும் திறனை நீங்கள் பெற்று கொள்வீர்கள். 

ருத்ராட்சம் 

மகா சிவராத்திரிக்கு முன்பாக கனவில் ருத்ராட்சத்தை காண்பது மங்களகரமான அறிகுறி. இந்த கனவு உங்களுடைய துக்கம், நோய் போன்ற குறைகள் நீங்குவதை குறிக்கிறது. இழுபறியாக கிடக்கும் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கலாம். 

கருப்பு சிவலிங்கம் 

இது சிவபெருமானின் அடையாளம். மகா சிவராத்திரிக்கு முன் உங்கள் கனவில் கருப்பு சிவலிங்கம் வந்தால் விரைவில் உங்கள் வேலையில் பதவி உயர்வு கிடைக்குமாம்.  

பாம்பு 

மகாசிவராத்திரிக்கு முன்பு ஒரு பாம்பு உங்கள் கனவில் வந்தால் செழிப்பான செல்வம் கிடைக்கும். 

நந்தி 

சிவனின் வாகனமான நந்தி கனவில் வந்தால், குடும்ப வழிபாடு முழுமையடையாது. சிவராத்திரிக்கு முன்போ அல்லது சிவராத்திரியிலோ கனவில் காளையைக் கண்டால், சிவபெருமானின் அருள் கிட்டும் என்று அர்த்தம். கனவு வெற்றியைக் குறிக்கிறது.

திரிசூலம் 

சிவன் கையில் எப்போதும் திரிசூலம் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அவரது திரிசூலத்தின் மூன்று முனைகளும் காமம், கோபம், பேராசையை குறிக்கும். படைப்புகளின் ஒற்றுமையைப் பேண சிவபெருமான் திரிசூலத்தை வைத்திருக்கிறார். மகா சிவராத்திரியின் போது கனவில் திரிசூலம் வந்தால் உங்கள் எல்லா பிரச்சனைகளையும் சிவபெருமான் அழிக்கப் போகிறார் என்று பொருளாகும். 

உடுக்கை 

இந்து புராணத்தின் படி, சிவபெருமான் 14 முறை உடுக்கை வாசிக்கிறார். அதன் பிறகே படைப்பில் மெல்லிசையும், தாளமும் எழுகின்றன. அதனால் மகா சிவராத்திரி அன்று உடுக்கையை கனவில் காண்பது மங்களகரமானது. 

இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: சிவபெருமானின் மகிமையை பெற எப்போது பூஜை, விரதம் கடைபிடிக்க வேண்டும்? முழுவிவரம்!

இதையும் படிங்க: சனிக்கிழமை இந்த விஷயங்களை நேரில் பார்த்தால் செம்ம அதிர்ஷ்டம்.. சனி பகவான் அருளை எப்படி பொழிவார் தெரியுமா?

click me!