பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா? அங்க மச்சம் இருக்க பெண்களை தோற்கடிக்கவே முடியாதாம்!

By Ma Riya  |  First Published Feb 2, 2023, 8:47 PM IST

பெண்களின் உடலில் காணப்படும் மச்சங்களால் என்னென்ன பலன்களை அடைகிறார்கள் என்பதை இங்கு காணலாம். 


நமது உடலில் காணப்படும் அளவில் சிறிய கருப்பு அல்லது பழுப்பு வண்ணப் புள்ளிகளை தான் மச்சம் என்கிறோம். இவை வெறும் புள்ளிகள் மட்டுமில்லை, நமக்கு அதிர்ஷ்டத்தையும் துரதிஷ்டத்தையும் கொண்டு வரக்கூடிய வல்லமை கொண்டவை. இதனால் கிடைக்கும் பலன்களை பொருத்தவரை, நம் உடலில் அவை அமைந்துள்ள பகுதிகளை பொறுத்து மாறுபடும். இதனை சாமுத்திரிகா சாஸ்திரம் நமக்கு விளக்கி கூறுகிறது. 

நெற்றி மச்சம் 

Tap to resize

Latest Videos

உங்களுடைய நெற்றியில் மச்சம் காணப்பட்டால், நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.  உங்களுடைய வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைவீர்கள் என்று பொருள். இந்த மச்சம் ஒரு நபரின் தன்னம்பிக்கையின் அடையாளம் போல. நெற்றியில் மச்சம் உள்ள நபர் வாழ்க்கையில் பெரிய உயரங்களை தொடுவாராம். பெண்களுக்கு நெற்றியின் மத்தியில் மச்சம் இருந்தால், அது அளவில்லா நம்பிக்கையையும், பயணத்திற்கான நல்ல வாய்ப்புகளையும் குறிக்கிறது. 

கழுத்து மச்சம்

ஒரு பெண்ணுடைய கழுத்தில் மச்சம் காணப்பட்டால் அவர் பொறுமை, ஞானம் உடையவராக இருப்பார். இந்த பெண்கள் புத்திசாலிகள். தங்கள் கனவுகளை அடைய வாழ்க்கையில் அரும்பாடுபட்டு உழைப்பார்கள். இவர்கள் சரியான முடிவுகளை எடுத்து சரியான திசையில் மட்டும் சென்றுவிட்டால் வாழ்க்கையின் பெரிய உயரங்களை அடைவார்கள். 

இடுப்பு மச்சம்

ஒரு பெண்ணின் இடுப்பில் மச்சம் இருந்தால் செல்வத்தையும் செழிப்பையும் அது குறிக்கிறது. அவர் நீண்ட காலம் படிக்கவும், வாழ்க்கையில் அதிக வெற்றிகளை வசப்படுத்தவும் பல வாய்ப்புகளை பெறுவார். 

புருவங்களுக்கு மத்தியில் மச்சம் 

புருவங்களுக்கு இடையே மச்சம் கொண்ட பெண்கள் ரொம்பவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. அதுமட்டுமின்றி நிகழ்காலத்திலும் சரியான முடிவுகளை தேர்ந்தெடுக்கும் ஞானமும், அறிவுமுதிர்ச்சியும் இவர்களிடம் காணப்படும். இவர்கள் அதிக செல்வ செழிப்பால்  ஆசிர்வதிக்கப்படுவார்கள். ஒரு பெண்ணுடைய இடது அல்லது வலது புருவத்தில் மச்சம் காணப்பட்டால் அது செல்வத்தை குறிப்பதாக கூறப்படுகிறது. அவர் நிறைய சம்பாதிப்பவராகவும், பொருளாதார சிக்கல்களை அதிகம் எதிர்கொள்ளாதவராகவும் இருப்பார். முக்கியமாக இவர்கள் குறைவாக செலவழித்து சேமிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். 

பாதங்களில் மச்சம் 

பெண்ணின் வலது காலில் மச்சம் இருந்தால் புத்திசாலித்தனத்தையும், வாழ்க்கையில் வெற்றியையும் அது குறிக்கும். இவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கும். இவர்கள் தனித்துவமாக இருப்பார்கள். வலது காலில் மச்சம் இருப்பது ஆக்கப்பூர்வமாக இருப்பதை குறிக்கிறது. 

கன்னத்தில் மச்சம் 

இவர்கள் அதிர்ஷ்டசாலி. இந்த பெண்களுக்கு வாழ்வின் அனைத்து ஆடம்பரங்களையும், இன்பங்களையும் கொடுக்கும். இவர்கள் வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் அனுபவித்து இன்பம் காணுவார்கள்.  இவர்கள் அதிகம் பழகுவதில்லை, ஒரு சிலருட மட்டுமே இருக்க விரும்புவார்கள். 

தோளில் மச்சம் 

தோளில் மச்சம் காணப்படும் பெண்கள் சகல வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்வார்கள். இந்த நபர் பொதுவாக ஒழுக்க இயல்பை உடையவர்கள். எப்போதும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள். பிறரின் நலனுக்காகவும் சிந்திப்பர். 

இதையும் படிங்க: அம்பானி மருமகள் என்றால் சும்மாவா? அவங்க பேக் விலையே ரூ.35 லட்சம், ஆடைகளின் விலையை கேட்டா ஆடி போய்டுவீங்க!

இதையும் படிங்க: தைப் பூசம் 4-ம் தேதியா, 5-ம் தேதியா? எப்போது, எப்படி விரதம் இருந்து வழிபட்டால் முருகன் அருளை அள்ளி கொடுப்பார்

click me!