முருகன் பக்தர்கள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ள தைப்பூசம் நெருங்கிவிட்டது. இந்த வேளையில் தைப்பூசத்தின் வரலாறை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்து புராணங்களில் கடவுள்களையும் தேவர்களையும் குறித்து பல கதைகள் உண்டு. ஒவ்வொரு விழாக்களும் ஒரு பின்னணியுடன் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்திற்கும் அப்படியான வரலாறு உண்டு. இந்த நன்னாளில் இறைவன் முருகனுக்குரிய திருவேலை வழிபாடு செய்தால் கெட்ட சக்திகள் விலகிவிடும். வறுமையின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பதும் பரவலான நம்பிக்கை.
கொண்டாட்டம்
தைப்பூச கொண்டாட்டம் என்பது தமிழகத்தை தவிர உலக நாடுகளில் அமைந்துள்ள முருகன் கோயில்களும் களைகட்டும். அன்றைய தினம் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடக்கும். முருகனின் அருளை பெற மனமுருகி பக்தர்கள் அலகு குத்தி, காவடி தூக்கி நேர்த்திக்கடனை செய்வர்.
தைப்பூசம் எப்போது?
இந்தாண்டு தைப்பூசம் பிப்ரவரி 4ஆம் தேதியா, 5ஆம் தேதியா என மக்களிடையே குழப்பம் நிலவியது. தெளிவாக கூற வேண்டுமெனில் பிப்ரவரி 5ஆம் தேதி தான் தைப்பூசம், ஏனென்றால் அன்றைய தினம் தான் பூசம் நட்சத்திரம் நாள் முழுக்க இருக்கும். விரதம் இருக்க நினைப்பவர்கள் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து மனதார விரதம் இருந்தால் பலன் கிடைக்கும்.
தைப்பூச வரலாறு தெரியுமா?
தைப்பூச நாளுக்கு சுவாரசியமான வரலாறு உண்டு. ஆதியில் உலகத்தில் தண்ணீர் உருவானது தைப்பூச நாளாக இருக்கலாம் என கூறப்படுகிறது. உலகம் முதலில் ஒரறிவு உயிர்களிலிருந்து தான் பிறந்துள்ளது. அதாவது நீரில் இருந்து புல், பூண்டு, அதன் பிறகு கால்நடை, மனிதர்கள் என இந்த பூமி பரிணமித்துள்ளதாக புராணம் நமக்கு சொல்கிறது.
இது மட்டுமா? இல்லையே, தைப்பூச நாளுக்கு இன்னும் வரலாற்று கதைகள் உண்டு. அனைவருக்கும் விருப்பமான முருகப்பெருமான் தன்னுடைய தந்தையான சிவனிடம் பிரணவ மந்திரத்தை பொருளோடு உபதேசம் செய்திருக்கிறார். அடடே! அப்பனுக்கு பாடம் சொன்ன முருகன் அந்த கதை தைப்பூசத்தில் நடந்ததா? ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
காட்சியளித்த முருகன்
முருகனின் தந்தையோடு வரலாறு முடியவில்லை. அவருடைய தாயார் பராசக்தி முருகனுக்கு வேல் வாங்கிய தினமும் தைப்பூசம் தான். முருகனின் அருளை தைப்பூசத்தில் தான் தேவர்கள் பெற்றுள்ளனர். முருகனிடம் அகத்தியர் தமிழ் மொழியை கற்றதும் இந்நாள்தான். சிதம்பரம் நடராஜர், பிரம்மா, விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்கு முருகபெருமான் தோன்றி அருள் பாலித்தது தைப்பூசம் தான் என புராணங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் முருகனின் அருளை பெற தைப்பூசம் அன்று விரதமிருந்து வழிபடுகிறார்கள்.
இதையும் படிங்க: தைப் பூசம் அன்று எப்போது, எப்படி விரதம் இருந்து வழிபட்டால் முருகன் அருளை அள்ளி கொடுப்பார்
இதையும் படிங்க: முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டால் போதும்.. சில நோய்க்கு மாத்திரையே போட வேண்டாம் தெரியுமா?